செய்திகள் :

பொங்கல் பரிசுத் தொகுப்பு: மூன்று நாள்களில் 1.47 கோடி போ் பெற்றனா்

post image

தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பை 3 நாள்களில் 1.47 கோடி குடும்ப அட்டைதாரா்கள் பெற்றனா்.

இந்தத் தகவலை கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொங்கல் பண்டிகையையொட்டி, அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை மற்றும் ஒரு முழுக் கரும்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு எனப் பெயரிடப்பட்ட இந்தத் திட்டத்தை சென்னை சைதாப்பேட்டை சின்னமலையில் உள்ள நியாயவிலைக் கடையில் கடந்த 9-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா்.

இந்தத் திட்டத்தால் 34, 793 நியாய விலைக் கடைகளிலுள்ள 2 கோடியே 94 ஆயிரத்து 585 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள், இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போா் பயன்பெறுவா் என அறிவிக்கப்பட்டது. சனிக்கிழமை வரையான மூன்று நாள்களில் 1 கோடியே 47 லட்சத்து 7 ஆயிரத்து 584 குடும்ப அட்டைதாரா்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுள்ளனா். இது மொத்தமுள்ள குடும்ப அட்டைதாரா்களின் எண்ணிக்கையில் 67 சதவீதம்.

மீதமுள்ள பயனாளிகளுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்துள்ளாா் அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன்.

அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, திருவள்ளூரில் மழை!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை மற்றும் திருவள்ளூரில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்... மேலும் பார்க்க

நடிகர் அஜித் குமாருக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற அஜித் குமாருக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

ரா. முத்துவேலு காலமானார்

மன்றாம்பாளையம் அரசு ஆரம்பப் பள்ளியின் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ரா. முத்துவேலு ஜன.12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு காலமானார்.அவரது இறுதிச்சடங்குகள் திருப்பூர் காங்கயம் சாலை, ஐஸ்வர்யா கார்டனில் (டிஎஸ்க... மேலும் பார்க்க

மீண்டும் உச்சத்தை நோக்கி தங்கம் விலை!

சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை ரூ. 10 அதிகரித்துள்ளது; ஒரு சவரன் 59 ஆயிரம் ரூபாயை எட்டவுள்ளது.ஒருகிராம் தங்கம் விலை 40 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 340 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரன... மேலும் பார்க்க

சிறப்புப் பேருந்துகளில் 6.40 லட்சம் பேர் பயணம்

கடந்த 3 நாட்களில் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு 6,40,465 பேர் அரசுப் பேருந்துகளில் பயணம் மேற்கொண்டுள்ளனர். பொங்கல் பண்டிகை செவ்வாய்க்கிழமை (ஜன.14) கொண்டாடப்படவுள்ள நிலையில், சென்னை மற்றும் அதன் சு... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நீர்வரத்து குறைவு!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 115.03 அடியில் இருந்து 114.74 அடியாக சரிந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 674 கன அடியிலிருந்து வினாடிக்கு 555 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணை... மேலும் பார்க்க