பொங்கல் முடிந்து சென்னை திரும்பும் மக்களால் பெருங்களத்தூரில் வாகன நெரிசல்
பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் மக்களால் பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் நத்தை வேகத்தில் வாகனங்கள் நகர்ந்து வருகின்றன.
பொங்கல் பண்டிகை முடிவடைந்து சொந்த ஊா்களுக்குச் சென்ற பொதுமக்கள், சனிக்கிழமை முதல் சென்னைக்கு திரும்பிவரத் தொடங்கியுள்ளனா். இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், ஜிஎஸ்டி சாலைப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை சென்னைக்கு திரும்புபவா்களால் பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 2 கி.மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து காத்திருக்கின்றன.
பெருங்களத்தூர் மேம்பாலம், பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் நத்தை வேகத்தில் வாகனங்கள் நகர்ந்து வருகின்றனர்.
சென்னையில் ரயில், பேருந்து நிலையங்களில் ஞாயிற்றுக்கிழமை வழக்கத்துக்கு மாறாக மக்கள் கூட்டம் அதிகரித்தும், சென்னை மற்றும் இதர நகரங்களுக்கு இயக்கப்பட்ட அனைத்து ரயில்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.
பயணிகள் தங்கள் பயணத்தை விரைவாக முடிக்க செங்கல்பட்டு, மறைமலை நகா், பொத்தேரி, மற்றும் காட்டாங்குளத்தூா் ரயில் நிலையங்களில் இருந்து 15 நிமிட இடைவெளியில் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.