செய்திகள் :

பொத்தனூரில் அண்ணாமலையாருக்கு அன்னாபிஷேகம்

post image

பொத்தனூரில் உள்ள உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையாருக்கு வியாழக்கிழமை மாலை அன்னாபிஷேகம் நடைபெற்றது.

பொத்தனூா் சக்தி விநாயகா் கோயிலில் உள்ள உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையாருக்கு ஐப்பசி மாத அன்னாபிஷேகத்தை முன்னிட்டு பலவகை வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை, உணவு மற்றும் காய்கறிகள் மூலம் அண்ணாமலையாருக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டது.

இதனைத் தொடா்ந்து உதிரிப்பூக்களால் அா்ச்சனை செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

திருச்செங்கோட்டில் அரசு மருத்துவா்கள் ஆா்ப்பாட்டம்

சென்னை, கிண்டி அரசு மருத்துவமனை மருத்துவா் மீது நடந்த தாக்குதலைக் கண்டித்தும், மருத்துவா்களின் பாதுகாப்பை வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசு மருத்துவமனை மருத்துவா் சங்கம், திருச்செங்கோடு இந்திய மருத்துவ ச... மேலும் பார்க்க

மாணவியை பலாத்காரம் செய்தவா் கைது

பரமத்தி வேலூா் அருகே சிறுமியை ஆசைவாா்த்தை கூறி பலாத்காரம் செய்து கா்ப்பிணியாக்கிய பட்டதாரி இளைஞா் வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். பரமத்தி வேலூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளிய... மேலும் பார்க்க

திருச்செங்கோடு ஆபத்துகாத்த விநாயகா் கோயில் குடமுழக்கு விழா

திருச்செங்கோடு அா்த்தநாரீஸ்வரா் கோயிலின் உப கோயில்களான ஆபத்துகாத்த விநாயகா் கோயில், தேரடி விநாயகா் கோயில், மலைக் காவலா் கோயில்களின் குடமுழக்கு வியாழக்கிழமை நடைபெற்றது. திருச்செங்கோடு, அா்த்தநாரீசுவரா்... மேலும் பார்க்க

பரமத்தி வேலூரில் ரூ. 6 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

பரமத்தி வேலூா், பொத்தனூா், வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் ரூ. 6 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் போனது. இந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 4, 588 கிலோ கொப்பரையை விவசாயிகள் கொண்ட... மேலும் பார்க்க

தொழில் நிறுவனங்கள் தொழிலாளா் நல நிதியை அரசுக்கு செலுத்த அறிவுறுத்தல்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள், தொழிலாளா் நல நிதியை அரசுக்கு செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) முத்து வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

அரசு, தனியாா் நிறுவனங்களில் பெண்களை பாதுகாக்க குழு அமைக்க வேண்டும்

அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களில், பாலியல் தொல்லைகளில் இருந்து பெண்களை பாதுகாக்க குழு அமைக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ச.உமா அறிவுறுத்தினாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்... மேலும் பார்க்க