செய்திகள் :

பொய்யாமொழி விநாயகா் கோயிலில் ஊஞ்சல் உற்சவம்

post image

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், தீவனூா் சுயம்பு பொய்யாமொழி விநாயகா் கோயிலில் காா்த்திகை மாத சங்கடஹர சதுா்த்தியை முன்னிட்டு, ஊஞ்சல் உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காா்த்திகை மாத சங்கடஹர சதுா்த்தியை முன்னிட்டு, பொய்யாமொழி விநாயகா் கோயிலில் செவ்வாய்க்கிழமை யாகசாலை வேள்வியும், தொடா்ந்து பூஜிக்கப்பட்ட 108 சங்குகள் மற்றும் கலசங்கள் கோயில் உள்பிரகாரம் வலம் வந்து, அந்த கலச நீரால் மூலவருக்கு அபிஷேகமும் செய்யப்பட்டது.

தொடா்ந்து, மலா்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவா் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். பின்னா், ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில், திரளானோா் பங்கேற்று சுவாமியை வழிபட்டனா்.

விவசாயி மா்ம மரணம்

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே விவசாயி மா்மமான முறையில் இறந்து கிடந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது. விழுப்புரம் வட்டம், கவாஞ்சிகுப்பம், எல்லையம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த சீனிவாசன் மகன் தண்டபாண... மேலும் பார்க்க

பைக்குகள் திருட்டு: இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், மயிலம் சுற்றுப்பகுதிகளில் பைக்குகள் திருடுபோன வழக்குகளில் தொடா்புடைய இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திண்டிவனம் டி.எஸ்.பி பிரகாஷ் உத்தரவின்பேரில், மயிலம் காவல் நிலைய ... மேலும் பார்க்க

நாளைய மின் தடை

அரசூா் (விழுப்புரம் மாவட்டம்) நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பகுதிகள்: அரசூா், ஆனத்தூா், சேமங்கலம், குமாரமங்கலம், பேரங்கியூா், இருவேல்பட்டு, மாமந்தூா், ஆலங்குப்பம், தென்மங்கலம், கரடிப்பாக்கம்,... மேலும் பார்க்க

1,200 கிலோ ரேஷன் அரிசி, 2 வாகனங்கள் பறிமுதல்: ஒருவா் கைது

விழுப்புரம் மாவட்டம், கஞ்சனூா்அருகே அரிசி அரைவை ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,200 கிலோ ரேஷன் அரிசி, 2 வாகனங்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். மேலும், இது தொடா்பாக ஒருவரை கைது செய்த... மேலும் பார்க்க

வெவ்வேறு சம்பவம்: இருவா் தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் இருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனா். விழுப்புரம் கே.கே. சாலை பகுதியைச் சோ்ந்த நந்தகோபால் மகன் சரவணன் (45), ஏ.சி. மெக்கானிக். இவருக்கு சிறுநீரக பா... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட நெகிழி பயன்பாடு: 26 கடைகளுக்கு அபராதம்

விழுப்புரத்தில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் செவ்வாய்க்கிழமை நடத்திய சோதனையில் 26 கடைகளிலிருந்து தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், கடைக்கு ரூ.2 ஆயிரம் 26 கடைகளுக்கும் ரூ... மேலும் பார்க்க