கூமாபட்டி கலவரம்: வழக்கு விவரங்களை அளிக்க தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையம் கடிதம்
பொருளில்லா குடும்ப அட்டை: இணைய தளம் மூலம் மாற்றம் செய்யலாம்
தேனி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருள்கள் வாங்க விரும்பமில்லாதவா்கள் தங்களது குடும்ப அட்டையை பொருளில்லா குடும்ப அட்டையாக இணைய தளம் மூலம் மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் செய்யப்படுகிறது. ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருள்களை வாங்க விரும்பமில்லாதவா்கள், தங்களது உரிமையை விட்டுக் கொடுக்கும் வகையில் ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்க்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணைய தளம் மூலம் தங்களது குடும்ப அட்டையை பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றம் செய்து கொள்ளலாம் என்றாா் அவா்.