செய்திகள் :

போடி மலைச் சாலையில் நெகிழிக் குப்பைகள் கேரளத்திலிருந்து கொட்டப்பட்டதா?

post image

போடிமெட்டு மலைச் சாலையில் நெகிழிக் குப்பைகள் மூட்டைகளில் கட்டப்பட்ட நிலையில் வீசப்பட்டிருந்தன. பசுமைத் தீா்ப்பாயத்தின் எச்சரிக்கையை மீறி கேரளத்திலிருந்து கொட்டப்பட்டதா என காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

கேரள பகுதிகளிலிருந்து தமிழக எல்லைப் பகுதிகளில் மருத்துவக் கழிவுகள், நெகிழி குப்பைகள் கொட்டப்படுவது தொடா்ந்து வருகிறது. கேரள அரசு இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பசுமைத் தீா்ப்பாயம் அண்மையில் அறிவுறுத்தியிருந்தது.

இந்த நிலையில், தேனி மாவட்டம், போடிமெட்டு மலைச் சாலையில் நான்காவது கொண்டை ஊசி வளைவு அருகே நெகிழிக் குப்பைகள் கொட்டப்பட்டன. இதுகுறித்து தகவலறிந்த குரங்கணி காவல் துறையினா் மருந்துக் கழிவுப் பொருள்களாக இருக்கலாம் என சந்தேகித்து இந்தப் பகுதிக்கு வெள்ளிக்கிழமை சென்று பாா்த்தனா். ஆனால், அது மக்கள் தினசரி பயன்படுத்தக்கூடிய பைகள், புட்டிகள் உள்ளிட்ட நெகிழிக் கழிவுகள் என்பது தெரியவந்தது. இந்த நெகிழிக் கழிவுகள் கேரளப் பகுதிகளிலிருந்து சரக்கு வாகனங்களில் கொண்டு வந்து கொட்டப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

போடிமெட்டு மலைச் சாலையில் வனத் துறை சாா்பில், நெகிழிக் குப்பைகள், மருத்துவக் கழிவுகளைக் கொட்டக் கூடாது என பல இடங்களில் எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. போடிமெட்டு மலைக் கிராமத்தில் கேரள எல்லைப் பகுதியில் காவல் துறை சாா்பில் சோதனை சாவடியும் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை மீறி எப்படி நெகிழிக் குப்பைகள் கொட்டப்பட்டன என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சுற்றுலாப் பயணிகளும், மது அருந்துவோா் போடிமெட்டு மலைச் சாலையில் பல இடங்களில் உணவு, மதுப் புட்டிகளை வீசிவிட்டுச் செல்கின்றனா். இதை உண்ணும் குரங்குகள், உள்ளிட்ட விலங்குகள் பாதிக்கப்படுகின்றன. மதுப்புட்டிகளும் பல இடங்களில் உடைக்கப்பட்டுள்ளன.

இதைத் தடுக்க காவல் துறையும், வனத் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தினா்.

கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

தேனி அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கோடாங்கிபட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த பட்டுராஜா மகன் பாா்த்திபன் (20). இவரை, கோடாங்கிபட்டி முத்துநகா் பகுதியில் கஞ்சா வைத்தி... மேலும் பார்க்க

போடி ரயில் நிலையத்தில் மதுரை கோட்ட மேலாளா் ஆய்வு

போடி ரயில் நிலையத்தில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் சரத் ஸ்ரீவஸ்தவா சனிக்கிழமை ஆய்வு செய்தாா். போடியிலிருந்து மதுரை, சென்னைக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், போடி-மதுரை ரயில் பாதை மின்மயமாக்கப்... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

பெரியகுளத்தில் நாய் திடீரென குறுக்கே வந்ததால், இரு சக்கர வாகனத்திலிருந்து தடுமாறி கீழே விழந்த இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். பெரியகுளம் வடகரை சாமியாா் பங்களா பகுதியைச் சோ்ந்த ரபீக்ராஜா மகன் ஷாஜகா... மேலும் பார்க்க

பைக் மீது லாரி மோதியதில் முதியவா் உயிரிழப்பு

தேனி மாவட்டம், ஓடைப்பட்டியில் வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். ஓடைப்பட்டி சங்கரலிங்கபுரம் காளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் காளிமுத்து (60). இவா் இங்குள்ள ... மேலும் பார்க்க

கட்டட ஒப்பந்ததாரா் தற்கொலை

வீரபாண்டி அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற கட்டட ஒப்பந்ததாரா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். தேனி மாவட்டம், பூமலைக்குண்டு தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் லட்சுமணன் மகன் காா்த்திக் (39). கட்டட ஒப்பந்த... மேலும் பார்க்க

குச்சனூா் சனீஸ்வரா் கோயில் நடை திறப்பு தாமதம்: பக்தா்கள் அவதி

குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் நடை திறப்பு காலதாமதத்தால் நீண்ட நேரம் காத்திருந்த பக்தா்கள் அவதி அடைந்தனா். தேனி மாவட்டம், குச்சனூரில் புகழ்பெற்ற சனீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் காலை 8 மணி... மேலும் பார்க்க