செய்திகள் :

போட்டியின் நடுவே மயங்கிய முன்னாள் குத்துச்சண்டை சாம்பியன் மரணம்!

post image

மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் போட்டியின் நடுவே மயங்கி விழுந்த நைஜீரிய குத்துச்சண்டை வீரர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த முன்னாள் தேசிய மற்றும் மேற்கு ஆப்பிரிக்க குத்துச்சண்டை சாம்பியனான கேப்ரியல் ஒலுவாசெகுன் ஒலன்ரெவாஜு (வயது 32), கடந்த மார்ச் 29 அன்று கானாவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அக்க்ராவிலுள்ள புக்கோம் பாக்ஸிங் அரேனாவில் கானா நாட்டு வீரரான ஜான் எம்பனுகு என்பவருக்கு எதிரான போட்டியின் மூன்றாம் சுற்றில் கேப்ரியல் திடீரென மயங்கி விழுந்துள்ளார். பின்னர், உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கொர்லே-பூ மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு சுமார் 30 நிமிட தீவிர சிகிச்சைக்குப் பின் கேப்ரியல் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரது மரணத்திற்கான தெளிவான காரணங்கள் தற்போது வரை வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், அவரது மரணத்திற்கு நைஜீரியா குத்துச்சண்டை ஆணையம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு அமைப்புகள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், நைஜீரிய குத்துச்சண்டை வாரியத்தின் பொதுச்செயலாளர் ரெமி அபோடெரின் கூறுகையில், பயமற்ற சண்டை வீரரான கேப்ரியல் போட்டி வளையத்தினுள் போர் வீரனைப் போல் மரணமடைந்துள்ளதாகக் கூறியுள்ளார்.

முன்னதாக, அதிகாரப்பூர்வ பதிவுகளின்படி கேப்ரியல் போட்டியிட்ட 23 சண்டை போட்டிகளில் அவர் 13 முறை வெற்றியும் 8 முறை தோல்வியும் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சிரியா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்! 9 பேர் பலி!

சிரியா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சிரியாவின் தென்மேற்கு பகுதிகளின் மீது நேற்று (ஏப்.2) இரவு இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டத... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட்: பிகார் அரசினால் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட நக்சல் கைது!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரூ.1 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த நக்சல் ஒருவர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பலாமு மாவட்டத்தின் துரிக்தார் மலைப்பகுதியில் மாவோயிஸ்டு அமைப்பின் க... மேலும் பார்க்க

கிரீஸ் அகதிகள் படகு விபத்து: 2 குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!

கிரீஸ் நாட்டின் லெஸ்போஸ் தீவின் அருகில் அகதிகள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 குழந்தைகள் உள்பட 7 பேர் பலியாகியுள்ளனர். கிரீஸ் நாட்டின் கிழக்குப் பகுதியிலுள்ள லெஸ்போஸ் தீவை நோக்கி ஏகன் ... மேலும் பார்க்க

இலங்கை: பிரதமர் மோடியின் வருகையால் தெரு நாய்களைப் பிடிக்கும் அரசு! மக்கள் போராட்டம்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு இலங்கையிலுள்ள தெரு நாய்களைப் பிடிக்கும் அரசின் திட்டத்திற்கு எதிராக அந்நாட்டு மக்களும் ஆர்வலர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்தியப் பிரதமர் ... மேலும் பார்க்க

பலூசிஸ்தானில் இணைய சேவை முடக்கம்!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தின் பல்வேறு மாவட்டங்களில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. பலூசிஸ்தானில் அரசுக்கு எதிராக மக்கள் போராடி வரும் நிலையில், அம்மாகாணத்தின் தலைநகர் குவேட்டா உள்ளிட்ட முக்கிய நக... மேலும் பார்க்க

ஏப்ரல் மாதத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாள் விடுமுறை?

நாட்டில் உள்ள வங்கிகள் 2025 ஏப்ரல் மாதத்தில் 16 நாள்கள் விடுமுறை வருகிறது. இதில் பல்வேறு பண்டிகைகள், உள்ளூர் விழா விடுமுறை மற்றும் பொது விடுமுறை, இரண்டாவது மற்றும் நான்காவது சனி மற்றும் கட்டாய வாராந்த... மேலும் பார்க்க