Dhoni : '38 வயசுல மேன் ஆப் தி சீரிஸ்...' - தோனியின் அந்த ஆஸ்திரேலிய ருத்ரதாண்டவம...
போதைப்பொருள் வழக்கு: நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு ED சம்மன்; பின்னணி என்ன?
தமிழ்த் திரைப்பட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா மீதான போதைப்பொருள் வழக்கில் அமலாக்கத்துறை (ED) தற்போது இருவருக்கும் சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் போதைப்பொருள் பயன்படுத்தியதாக இருவரும் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இருவரும் சில வாரங்களுக்கு முன் சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து நிபந்தனை ஜாமீன் பெற்று வெளிவந்தனர்.

இதற்கிடையில், இருவரின் வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் சொத்துகள் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. போதைப் பொருள் நிதி வெளிநாட்டுக்குச் சென்றதா எனும் கோணத்திலும் சோதனை நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அமலாக்கத்துறை (ED) தற்போது ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகிய இருவருக்கும் சம்மன் அனுப்பியுள்ளது. வெளியான தகவலின்படி, ஸ்ரீகாந்த் வருகிற அக்டோபர் 28ஆம் தேதியும், கிருஷ்ணா அக்டோபர் 29ஆம் தேதியும் அமலாக்கத்துறையின் அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.


















