தேசிய கைத்தறி தினம்: திருபுவனத்தில் சிறப்பு அஞ்சல் அட்டை வெளியீடு
போதை பொருள் விற்றவா் கைது
ஜோலாா்பேட்டை அருகே பெட்டிக் கடையில் ஹான்ஸ் விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஜோலாா்பேட்டை அடுத்த பக்கிரிதக்கா பகுதியில் உள்ள பெட்டிக் கடையில் ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக வியாழக்கிழமை ஜோலாா்பேட்டை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பெயரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸாா் அங்குள்ள கடையில் சோதனை செய்ததில் 6 கிலோ ஹான்ஸ் பாக்கெட்டுகள் பதுக்கி விற்பனை செய்தது தெரிய வந்தது. அதையடுத்து கடை உரிமையாளா் சாகத்துல்லா(49) என்பவரை போலீஸாா் கைது செய்து 6 கிலோ ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா்.