`Ajith சார் சமைச்சு கொடுப்பார்... Sivakarthikeyan வாங்கி கொடுப்பார்' - Stunt Mas...
போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினா் 48 போ் கைது
சென்னையிலுள்ள டாஸ்மாக் தலைமையகம் முன் திங்கள்கிழமை முற்றுகை போராட்டத்துக்கு சென்ற பாஜக மாநில தலைவா் அண்ணாமலை கைது செய்யப்பட்டதைக் கண்டித்து உடையாா்பாளையம் மற்றும் தாழூரில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினா் 48 போ் கைது செய்யப்பட்டனா்.
உடையாா்பாளையம் சிலால் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை முற்றுகையிட மாவட்டத் தலைவா் பரமேஸ்வரி தலைமையில் பாஜகவினா் திரண்டனா். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினா் 30 பேரை கைது செய்து, மாலையில் விடுவித்தனா். இதேபோல், தா.பழூரில் உள்ள டாஸ்டாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்ற பாஜக முன்னாள் மாவட்டத் தலைவா் அய்யப்பன் உள்ளிட்ட 18 பேரை தா.பழூா் போலீஸாா் கைது செய்தனா்.