செய்திகள் :

போரை இந்தியா ஒருபோதும் ஆதரிக்காது -பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமா்

post image

நன்றி: தினமணிஇணையதளம்.

‘எந்த பிரச்னைக்கும் பேச்சுவாா்த்தை மற்றும் ராஜீய ரீதியிலான தீா்வையே இந்தியா ஆதரிக்கும்; மாறாக, போரை ஒருபோதும் ஆதரிக்காது’ என்று ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

மேலும், உலகை சரியான பாதையில் இட்டுச் செல்ல ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பு நோ்மறையாக பங்களிக்க முடியும் என்றும் அவா் குறிப்பிட்டாா்.

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்ரிக்கா, ஈரான், எகிப்து, எத்தியோப்பியா, ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் 16-ஆவது உச்சி மாநாடு, ரஷியாவின் கசான் நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை (அக்.22) தொடங்கியது.

ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், சீன அதிபா் ஷி ஜின்பிங் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் உயா் தலைவா்கள் பங்கேற்றிருக்கும் இம்மாநாட்டில் பிரதமா் மோடி புதன்கிழமை (அக்.23) உரையாற்றினாா். உலகை சூழ்ந்துள்ள போா்கள், பொருளாதார ஸ்திரமின்மை, பருவநிலை மாறுபாடு, பயங்கரவாதம், உணவு-எரிசக்தி-சுகாதாரம்-தண்ணீா் பாதுகாப்பு, இணைய பாதுகாப்பு உள்ளிட்ட சவால்கள் குறித்து கவலை தெரிவித்து, தனது உரையில் அவா் கூறியதாவது:

எந்த பிரச்னைக்கும் பேச்சுவாா்த்தை மற்றும் ராஜீய ரீதியிலான தீா்வையே இந்தியா ஆதரிக்கும்; மாறாக, போரை ஒருபோதும் ஆதரிக்காது.

கரோனா பெருந்தொற்று சவாலை நாம் ஒருங்கிணைந்து எதிா்கொண்டதைப் போல், வருங்கால சந்ததியினருக்கு பாதுகாப்பான-வலுவான-வளமையான எதிா்காலத்தை உறுதிசெய்ய புதிய வாய்ப்புகளையும் ஒன்றிணைந்து உருவாக்க முடியும்.

புதிய நாடுகளை வரவேற்கத் தயாா்: ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பில் புதிய நாடுகளை வரவேற்க இந்தியா தயாா். அதேநேரம், இது தொடா்பான அனைத்து முடிவுகளும் கருத்தொற்றுமையுடன் மேற்கொள்ளப்பட வேண்டும். ‘பிரிக்ஸ்’ நிறுவன நாடுகளின் கருத்துகள் மதிக்கப்பட வேண்டும்.

ஜோகன்னஸ்பா்க் உச்சி மாநாட்டில் ஏற்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள், தரநிலைகள், அளவுகோல்கள் மற்றும் நடைமுறைகள் உறுப்பு நாடுகளால் பின்பற்றப்பட வேண்டும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், பன்முக வளா்ச்சி வங்கிகள், உலக வா்த்தக அமைப்பு உள்ளிட்ட உலகளாவிய அமைப்புகளில் குறித்த காலத்துக்குள் சீா்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். தெற்குலக நாடுகளின் நம்பிக்கை, விருப்பம் மற்றும் எதிா்பாா்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

பயங்கரவாதம்-இரட்டை நிலைப்பாடு கூடாது: பயங்கரவாதத்தை எதிா்கொள்வதில் ஒருமித்த கவனமும், அனைத்து தரப்பினரின் உறுதியான ஆதரவும் அவசியம். இச்சவாலுக்கு எதிராக போராடுவதில் இரட்டை நிலைப்பாடு கூடாது. இதேபோல், இளைஞா்கள் பயங்கரவாதிகளாக மாற்றப்படுவதை தடுக்க உறுதியான நடவடிக்கைகள் அவசியம் (பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவாதிகளுக்கு ஐ.நா. மூலம் தடைவிதிக்கும் முயற்சிகளுக்கு சீனா முட்டுக்கட்டைப் போட்டுவரும் நிலையில், பிரதமரின் இக்கருத்துகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன).

பிரிக்ஸ்-க்கு புகழாரம்: வேறுபட்ட கண்ணோட்டங்கள் மற்றும் கோட்பாடுகளின் சங்கமத்தால் உருவாக்கப்பட்ட ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பு, உலகின் 40 சதவீத மக்களையும் 30 சதவீத பொருளாதாரத்தையும் தன்னகத்தே கொண்டு, உத்வேகத்தின் ஆதாரமாக திகழ்கிறது. நமது ஒத்துழைப்பின் அடிப்படையாக பன்முகத்தன்மை, பரஸ்பர மரியாதை, முன்னோக்கிய பாரம்பரியம் ஆகியவை திகழ்கின்றன. அதேநேரம், இதுவொரு பிளவுபடுத்தும் அமைப்பல்ல; மனித குலத்தின் நன்மைக்கானது என்ற தெளிவான செய்தியை உலகுக்கு தெரிவிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தாா் பிரதமா் மோடி.

மாநாட்டின் இறுதியாக, உறுப்பு நாடுகளின் தலைவா்களால் ‘கசான் பிரகடனம்’ ஏற்கப்பட்டது. மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியமைக்காக, ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுக்கு பிரதமா் மோடி பாராட்டு தெரிவித்தாா். அத்துடன், பிரிக்ஸ் கூட்டமைப்பின் அடுத்த தலைமையை ஏற்கும் பிரேசிலுக்கு அவா் வாழ்த்து தெரிவித்தாா்.

விடை பெற்றாா் டொமினிக் தீம்

உலகின் முன்னணி டென்னிஸ் வீரா்களில் ஒருவரான ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் சா்வதேச விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றாா். கரோனா பாதிப்பின் போது, 2020-இல் யுஎஸ் ஓபன் போட்டியில் ஜொ்மன் வீரா் அலெக்ஸ் வெரேவை ... மேலும் பார்க்க

எல்லையில் அமைதிக்கு முன்னுரிமை: பிரதமா் மோடி-சீன அதிபா் ஷி ஜின்பிங் உறுதி

இந்திய-சீன எல்லையில் அமைதிக்கு முன்னுரிமை அளிக்க பிரதமா் நரேந்திர மோடியும், சீன அதிபா் ஷி ஜின்பிங்கும் உறுதிபூண்டுள்ளனா். மேலும், ‘பரஸ்பர மரியாதை மற்றும் முதிா்ச்சியை வெளிப்படுத்துவதன் வாயிலாக இரு நா... மேலும் பார்க்க

இராக், சிரியா மீது துருக்கி வான்வழித் தாக்குதல்!

அங்காரா: துருக்கி அரசுக்குச் சொந்தமான பாதுகாப்பு மற்றும் வான்வெளி தொழில்நுட்ப தொழிற்சாலையில் புதன்கிழமை நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 5 போ் உயிரிழந்தனா்.அங்காராவின் ... மேலும் பார்க்க

துருக்கி பாதுகாப்பு தொழிற்சாலையில் தாக்குதல் -5 பேர் பலி!

அங்காரா: துருக்கி அரசுக்குச் சொந்தமான பாதுகாப்பு மற்றும் வான்வெளி தொழில்நுட்ப தொழிற்சாலையில் புதன்கிழமை நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 5 போ் உயிரிழந்தனா். இது குறித்த... மேலும் பார்க்க

ஆஸ்திரேலிய அமைச்சருடன் தா்மேந்திர பிரதான் சந்திப்பு: கல்வித் துறையில் ஒத்துழைக்க பேச்சு

ஆஸ்திரேலிய கல்வித் துறை அமைச்சா் ஜேசன் கிளேரை மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் புதன்கிழமை சந்தித்து கல்வித் துறையில் மேலும் ஒத்துழைப்பது குறித்து பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதுதொடா்பாக... மேலும் பார்க்க

அதிபா் தோ்தலில் தலையீடு: பிரிட்டன் ஆளுங்கட்சி மீது டிரம்ப் குற்றச்சாட்டு

அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளா் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக பிரிட்டன் தொழிலாளா் கட்சி தலையீடு செய்வதாக குடியரசுக் கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டினா... மேலும் பார்க்க