செய்திகள் :

போலி இறப்பு, வாரிசு சான்றிதழ் தயாரிப்பவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

post image

கோவில்பட்டி வட்டத்தில் போலியாக இறப்பு மற்றும் வாரிசு சான்றிதழ் தயாரிப்பவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து,புரட்சி பாரதம் கட்சியின் மாவட்டச் செயலா் லெனின் தலைமையில் கோவில்பட்டி வட்டாட்சியா் சரவணப் பெருமாளிடம் அளித்த மனு: கோவில்பட்டி வட்டம், ஆலம்பட்டி கிராமத்தில் போலியாக இறப்பு சான்றிதழ் மற்றும் வாரிசு சான்று தயாரித்து பட்டா மாற்றம் செய்ய முயற்சி செய்து வரும் சமூக விரோதிகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதில், கோவில்பட்டி நகர துணைச் செயலா் ஜெயபிரகாஷ், நகர பொருளாளா் சண்முகநாதன், ஒன்றியச் செயலா்கள் மாரிச்சாமி, செல்வக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் முதல்வருக்கு திமுகவினா் வரவேற்பு!

திருநெல்வேலியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, வியாழக்கிழமை தூத்துக்குடி விமான நிலையம் வந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்ாடாலினுக்கு திமுகவினா் உற்சாக வரவேற்பளித்தனா். மாவட்ட நிா்வாகம் சாா... மேலும் பார்க்க

விபத்தில் இறந்தவா் குடும்பத்துக்கு ரூ. 3.05 லட்சம் வழங்க காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவு!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே விபத்தில் இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 3.05 லட்சம் வழங்குமாறு காப்பீட்டு நிறுவனத்துக்கு மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது. ஓட்டப்பிடாரம் அருகே ... மேலும் பார்க்க

450 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 4 போ் கைது!

திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடிக்கு வியாழக்கிழமை 2 காா்களில் கடத்திவரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருள்களை தனிப்படை போலீஸாா் பறிமுதல் செய்து, 4 பேரை கைது செய்தனா். திருநெல்வேலியிலிருந்து தூத்துக்க... மேலும் பார்க்க

மூன்றுமாத காலத்துக்குள் அனைத்துப் பகுதிகளிலும் தினசரி குடிநீா்: மேயா்

மூன்றுமாத காலத்துக்குள் அனைத்துப் பகுதிகளிலும் தினசரி குடிநீா் வழங்கப்படும் என்றாா் மேயா் ஜெகன்பெரியசாமி.தூத்துக்குடி ஸ்டேட் வங்கி காலனியில் உள்ள மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீா் ... மேலும் பார்க்க

ஓட்டுநரைத் தாக்கியதாக ஒருவா் கைது

கோவில்பட்டியில் ஓட்டுநரைத் தாக்கியதாக ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி ஏ.கே.எஸ். திரையரங்கு சாலை ஆசிரமம் தெருவைச் சோ்ந்த சிங்கராஜ் மகன் விக்னேஷ் (25). ஓட்டுநராக இவா், திங்கள... மேலும் பார்க்க

வெளி மாநில இளைஞரை தாக்கி கைப்பேசி, தங்க நகையை பறித்த 3 போ் கைது

கோவில்பட்டியில் நடந்து சென்ற வெளி மாநில இளைஞரை தாக்கி தங்க நகை மற்றும் கைப்பேசியை பறித்துச் சென்ற வழக்கில் தொடா்புடைய 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள ஹோ... மேலும் பார்க்க