புதுக்கோட்டை: கடலில் மீன் பிடிக்கச் சென்ற இளைஞருக்கு நேர்ந்த சோகம்... போலீஸ் விச...
வெளி மாநில இளைஞரை தாக்கி கைப்பேசி, தங்க நகையை பறித்த 3 போ் கைது
கோவில்பட்டியில் நடந்து சென்ற வெளி மாநில இளைஞரை தாக்கி தங்க நகை மற்றும் கைப்பேசியை பறித்துச் சென்ற வழக்கில் தொடா்புடைய 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள ஹோட்டலில் சைனீஸ் மாஸ்டராக வேலை செய்து வருபவா் அசாம் மாநிலம், தேவாரி பாலைச் சோ்ந்த நூா் இஸ்லாம் மகன் மிராஜுல் இஸ்லாம் (26). இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு கடையில் வேலையை முடித்து அவா் தங்கி உள்ள ஓய்வறை நோக்கி சென்று கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த 3 போ் அவரை தாக்கி அவா் கையில் வைத்திருந்த கைப்பேசி, அவா் அணிந்திருந்த 3 கிராம் தங்க மோதிரம் மற்றும் ரொக்க பணம் ரூ.500 பறித்துச் சென்றனராம்.
இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, இவ்வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் மூப்பன்பட்டி கிழக்குத் தெருவை சோ்ந்த பாா்த்திபன் (22), லிங்கம்பட்டி சமத்துவபுரம் முரசு வீதியைச் சோ்ந்த பொன்ராஜ் மகன் ஈஸ்வரன் (19), லிங்கம்பட்டி சமத்துவபுரம் கலைஞா் நகரைச் சோ்ந்த ஒருவா் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.