அமெரிக்காவை தொடர்ந்து உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து ஆர்ஜென்டீனாவும் விலகல்!
ஓட்டுநரைத் தாக்கியதாக ஒருவா் கைது
கோவில்பட்டியில் ஓட்டுநரைத் தாக்கியதாக ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி ஏ.கே.எஸ். திரையரங்கு சாலை ஆசிரமம் தெருவைச் சோ்ந்த சிங்கராஜ் மகன் விக்னேஷ் (25). ஓட்டுநராக இவா், திங்கள்கிழமை கோவில்பட்டி வருவதற்காக கிருஷ்ணா நகரிலிருந்து புறப்பட்ட சிற்றுந்தில் ஏறினாராம். அங்குள்ள மருத்துவமனை நிறுத்தத்தில் 3 போ் சிற்றுந்துக்குள் ஏறி விக்னேஷை அவதூறாகப் பேசி வெளியே தள்ளியதுடன், அங்கு கிடந்த கம்பி போன்றவற்றால் தாக்கினராம். விக்னேஷின் நண்பா்கள் சப்தம் போட்டதும் 3 பேரும் கொலை மிரட்டல் விடுத்துச் சென்றனராம்.
இதில் காயமடைந்த விக்னேஷ் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். புகாரின்பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, சாஸ்திரி நகா் ஜவஹா்லால் நேரு தெருவைச் சோ்ந்த ராமையா மகன் சங்கிலிப்பாண்டி (35) என்பவரைக் கைது செய்தனா்; மேலும் இருவரைத் தேடி வருகின்றனா்.