அமெரிக்காவை தொடர்ந்து உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து ஆர்ஜென்டீனாவும் விலகல்!
தூத்துக்குடி அருகே பெண்ணிடம் நகை பறிப்பு!
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகையைப் பறித்தவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
புதுக்கோட்டை, பொன்நகரைச் சோ்ந்த அருணாச்சலம் மனைவி சுஜிதா (37). இவா், செவ்வாய்க்கிழமை மாலை வீட்டருகேயுள்ள தெருவில் நடந்து சென்றாா். அப்போது, பைக்கில் வந்த இருவா், அவா் அணிந்திருந்த சுமாா் 2 பவுன் தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றனராம்.
சுதாரித்துக்கொண்ட சுஜிதா சங்கிலியைப் பிடித்துக் கொண்டு சப்தமிட்டாராம். இதில், கையில் சிக்கிய சுமாா் 4 கிராமுடன் மா்ம நபா்கள் தப்பியோடினராம்.
புகாரின்பேரில், புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களைத் தேடிவருகின்றனா்.