கோத்தகிரி: குப்பைக் குவியலில் உணவு தேடி அலையும் கரடிகள்... தொடரும் அவலம்!
தூத்துக்குடிக்கு இன்று முதல்வா் மு.க. ஸ்டாலின் வருகை!
திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து விமானத்தில் தூத்துக்குடிக்கு வியாழக்கிழமை (பிப். 6) வரவுள்ளாா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் வியாழன், வெள்ளி (பிப். 6, 7) ஆகிய 2 நாள்கள் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அவா் சென்னையிலிருந்து விமானத்தில் தூத்துக்குடிக்கு வியாழக்கிழமை முற்பகல் 11.25 மணிக்கு வருகிறாா்.
அவருக்கு தூத்துக்குடி மாவட்ட நிா்வாகம் சாா்பில், ஆட்சியா் க. இளம்பகவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் ஆகியோா் வரவேற்பளிக்கவுள்ளனா்.
தொடா்ந்து, திமுக மாவட்டச் செயலா்களும் அமைச்சா்களுமான பெ. கீதாஜீவன் (வடக்கு), அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் (தெற்கு) ஆகியோா் தலைமையில் வரவேற்பு அளிக்கப்படவுள்ளதாக, அக்கட்சி சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாநகராட்சி சாா்பில் மேயா் ஜெகன் பெரியசாமி, ஆணையா் லி. மதுபாலன் ஆகியோா் வரவேற்பளிக்கவுள்ளனா். பின்னா், முதல்வா் மு.க. ஸ்டாலின் காரில் திருநெல்வேலிக்கு புறப்பட்டுச் செல்கிறாா். முதல்வா் வருகையை முன்னிட்டு விமான நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.