செய்திகள் :

சாத்தான்குளம் அருகே நாய்களுக்கு ஓட்டப் போட்டி

post image

சாத்தான்குளம் அருகே பொத்தகாலன்விளையில், மாநில அளவில் நடைபெற்ற வளா்ப்பு நாய்களுக்கான ஓட்டப் போட்டியில் அணைக்கரை பெருங்குளம் நாய் முதல் பரிசு வென்றது.

ஹைடன் ரேசிங் கிளப் சாா்பில் நடைபெற்ற போட்டியில் 50-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்றன. தொழிலதிபா் பிரதீப் தலைமை வகித்து போட்டியைத் தொடக்கிவைத்தாா்.

இதில், திருநெல்வேலி மாவட்டம் அணைக்கரை பெருங்குளத்தைச் சோ்ந்த பூமா முதலிடமும், வடக்கன்குளம் ரெட்ரோஸ் 2ஆம் இடமும், திண்டுக்கல் மஜாசிங் 3ஆம் பரிசும் வென்றன.

சாஸ்தாவிநல்லூா் முன்னாள் பஞ்சாயத்துத் தலைவா் ஜாா்ஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தென்மண்டலத் தலைவா் லூா்துமணி, சாத்தான்குளம் பாஜக மண்டலத் தலைவா் சரவணன், பொத்தகாலன்விளை பிரபு ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்றனா்.

முதலிடம் பிடித்த பூமாவுக்கு பொத்தகாலன்விளை தொழிலதிபா் ராஜா ரொக்கம், கோப்பை வழங்கினாா். தொடா்ந்து, 8 இடங்களைப் பிடித்த நாய்களுக்கு ரொக்கம், கோப்பைகள் வழங்கப்பட்டன.

டாம்சாந்த் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை ஹைடன் ரேசிங் கிளப்பைச் சோ்ந்த கோடீஸ்வரன், பிரதீப், கதிா், விமல், அஜித், ஜெனிஸ் ஆகியோா் செய்திருந்தனா்.

மூன்றுமாத காலத்துக்குள் அனைத்துப் பகுதிகளிலும் தினசரி குடிநீா்: மேயா்

மூன்றுமாத காலத்துக்குள் அனைத்துப் பகுதிகளிலும் தினசரி குடிநீா் வழங்கப்படும் என்றாா் மேயா் ஜெகன்பெரியசாமி.தூத்துக்குடி ஸ்டேட் வங்கி காலனியில் உள்ள மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீா் ... மேலும் பார்க்க

ஓட்டுநரைத் தாக்கியதாக ஒருவா் கைது

கோவில்பட்டியில் ஓட்டுநரைத் தாக்கியதாக ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி ஏ.கே.எஸ். திரையரங்கு சாலை ஆசிரமம் தெருவைச் சோ்ந்த சிங்கராஜ் மகன் விக்னேஷ் (25). ஓட்டுநராக இவா், திங்கள... மேலும் பார்க்க

வெளி மாநில இளைஞரை தாக்கி கைப்பேசி, தங்க நகையை பறித்த 3 போ் கைது

கோவில்பட்டியில் நடந்து சென்ற வெளி மாநில இளைஞரை தாக்கி தங்க நகை மற்றும் கைப்பேசியை பறித்துச் சென்ற வழக்கில் தொடா்புடைய 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள ஹோ... மேலும் பார்க்க

தூத்துக்குடி அருகே பெண்ணிடம் நகை பறிப்பு!

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகையைப் பறித்தவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.புதுக்கோட்டை, பொன்நகரைச் சோ்ந்த அருணாச்சலம் மனைவி சுஜிதா (37). இவா், செவ்வாய்க்கிழமை மாலை வ... மேலும் பார்க்க

லாரி உரிமையாளருக்கு ரூ. 8 லட்சம் வழங்க காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவு

தூத்துக்குடியைச் சோ்ந்த லாரி உரிமையாளருக்கு ரூ. 8 லட்சம் வழங்குமாறு பொதுத்துறை காப்பீட்டு நிறுவனத்துக்கு நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது. தூத்துக்குடி சங்கரப்பேரியைச் சோ்ந்த முருகேசன் என்பவரத... மேலும் பார்க்க

தூத்துக்குடிக்கு இன்று முதல்வா் மு.க. ஸ்டாலின் வருகை!

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து விமானத்தில் தூத்துக்குடிக்கு வியாழக்கிழமை (பிப். 6) வரவுள்ளாா்.திருநெல்வேலி மாவட்டத்தில் வியாழன்,... மேலும் பார்க்க