செய்திகள் :

மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் தேர்தல்: 3 மணி நிலவரம்!

post image

மகாராஷ்டிர பேரவைத் தேர்தல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பிற்பகல் 3 மணி வாக்குப்பதிவு நிலவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு இன்று(நவ. 20) ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, இங்குள்ள 288 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதேபோல, ஜார்க்கண்டில் மொத்தமுள்ள 81 பேரவைத் தொகுதிகளில் முதல்கட்டமாக 43 தொகுதிகளுக்கு கடந்த 13-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையில், இரண்டாவது மற்றும் இறுதிக்கட்டமாக 38 தொகுதிகளுக்கு இன்று(நவ.20) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஜார்க்கண்ட், மகாராஷ்டிர ஆகிய இரு மாநிலங்களிலும் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை வருகிற நவம்பர் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 45.53 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

அதேபோன்று, ஜார்க்கண்ட் மாநிலத்​தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், பிற்பகல் 3 மணி நேர நிலவரப்படி 61.47 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜார்க்கண்ட்டில் பாஜக ஆட்சியா? கருத்துக் கணிப்பு முடிவுகள்!

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.ஜார்க்கண்ட்டில் உள்ள 81 பேரவைத் தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவாக 38 தொகுதிகளுக்க... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் பலி!

மகாராஷ்டிரத்தில் பீட் தொகுதி சுயேட்சை வேட்பாளர் பாலாசாகேப் ஷிண்டேவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.மகாராஷ்டிரத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் இன்று (நவ. 20) நடைபெற்ற நிலையில், பீட் தொகுதியில் உள்ள சத... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட் தேர்தல்: மொத்த வாக்குப்பதிவு நிலவரம்!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில் இறுதிக்கட்டமாக மீதமுள்ள 38 தொகுதிகளில் இன்று(நவ. 20) வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.இந்த நிலையில், ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் மேற்கண்ட... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் ஆட்சி மாறுமா? கருத்துக் கணிப்பு முடிவுகள்!

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. மகாராஷ்டிரத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணி முதல்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் 58% வாக்குப்பதிவு!

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் 58.22% வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. (மாலை 5 மணி நிலவரம்) மேலும் பார்க்க

ரௌடிகளின் தலைநகராக மாறிவிட்டது தில்லி: அதிஷி குற்றச்சாட்டு!

தேசியத் தலைநகரில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதாக முதல்வர் அதிஷி குற்றம் சாட்டியுள்ளார். கடந்த வாரம் வடகிழக்கு தில்லியின் சுந்தர் நகரியில் கொல்லப்பட்ட 28 வயது இளைஞரின் பெற்றோரை முதல்வர் சந்தித்தார... மேலும் பார்க்க