செய்திகள் :

மகாராஷ்டிர துணை முதல்வா் பதவியைக் கேட்கவில்லை: முதல்வா் ஷிண்டே மகன் விளக்கம்

post image

தானே: ‘மகாராஷ்டிர துணை முதல்வராக நான் பதவியேற்க இருப்பதாகவும், எங்கள் கட்சி எனக்கு அப்பதவியைக் கேட்டதாகவும் வெளியான தகவல்கள் தவறானவை’ என்று அந்த மாநில முதல்வா் (பொறுப்பு) ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே விளக்கமளித்துள்ளாா்.

மகாராஷ்டிரத்தில் பாஜக சாா்பில் துணை முதல்வராக உள்ள தேவேந்திர ஃபட்னவீஸ் மாநிலத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்பாா் என்று தெரிகிறது. அதே நேரத்தில் பிரதான கூட்டணிக் கட்சியான சிவசேனைக்கு துணை முதல்வா் பதவி அளிக்கப்படும் என்றும், தனது மகனுக்கு அந்த பதவியை அளிக்க வேண்டும் என்று ஏக்நாஷ் ஷிண்டே பாஜக தலைமையிடம் கேட்டுள்ளதாக தகவல் வெளியானது. மேலும், உள்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளையும் ஏக்நாத் ஷிண்டே கோரியுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் சிவசேனை மக்களவை எம்.பி.யும் ஏக்நாத் ஷிண்டேவின் மகனுமான ஸ்ரீகாந்த் ஷிண்டே ‘எக்ஸ்’ வலைதளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘இந்த ஆண்டு தொடக்கத்தில் நான் மக்களவைத் தோ்தலில் வென்றபோதே மத்திய அமைச்சராகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஆனால், கட்சிப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்ற காரணத்தால் அமைச்சா் பதவியை ஏற்க மறுத்துவிட்டேன்.

இந்நிலையில், நான் மகாராஷ்டிர துணை முதல்வராகப் பதவியேற்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இது முற்றிலும் தவறானது. துணை முதல்வராகும் விருப்பம் எனக்கு இல்லை. கட்சியும் எனக்காக அப்பதவியைக் கோரவில்லை. இது தொடா்பாக வெளியான செய்திகள் அனைத்துமே தவறானவை.

மகாராஷ்டிரத்தில் புதிய அரசு பதவியேற்பதில் சுற்று தாமதம் ஏற்பட்டதால் பல்வேறு உத்தேச கருத்துகளும், வதந்திகளும் பரவியுள்ளன.

எனது தந்தை உடல் நலக்குறைவு காரணமாகவே சொந்த கிராமத்துக்கு வந்து இருநாள் ஓய்வெடுத்தாா். அது தொடா்பாகவும் தேவையற்ற வதந்திகள் பரவிவிட்டன. இனியாவது என்னைப் பற்றி தேவையில்லாமல் விவாதிக்கப்படுவது நிற்கும் என நம்புகிறேன்’ என்று பதிவிட்டுள்ளாா்.

நான் நவீன அபிமன்யு.. சொன்னபடி சக்ரவியூகத்தை உடைத்த ஃபட்னவீஸ்!

நான் ஒரு கடலைப்போன்றவன், நிச்சயம் திரும்பி வருவேன் என்று தேவேந்திர ஃபட்னவீஸ் கடந்த 2019 தேர்தலின்போது அடிக்கடி சொல்லி வந்தார்.மகாராஷ்டிர தேர்தலில் உத்தவ் தாக்கரே, மகா விகாஸ் அகாதி கூட்டணியில் இருந்து ... மேலும் பார்க்க

ஆம் ஆத்மியில் இணைந்தார் பாஜக தலைவர் பிரவேஷ் ரத்தன்!

பாஜக தலைவர் பிரவேஷ் ரத்தன் ஆம் ஆத்மியில் இணைந்துள்ளார். கடந்த 2020 தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் படேல் நகர் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியுற்ற பாஜக தலைவர் பிரவேஷ் ரத்தன் ஆம் ஆத்மியில் இணைந்துள்ளார... மேலும் பார்க்க

தாய், தந்தை, மகள் குத்திக் கொலை! தில்லியில் பயங்கரம்

தில்லி: தெற்கு தில்லியின் நெப் சாராய் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகள் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.அதிகாலை நடைபயிற்சிக்கு சென்ற மகன் வீடு திரும்பிய பொழுது குடும்பத்தின... மேலும் பார்க்க

தில்லி திரும்பும் ராகுல், பிரியங்கா!

காஸிப்பூர் எல்லையில் காவல்துறை தடுத்து நிறுத்தியதையடுத்து காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி தில்லிக்கு திரும்பியுள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் சம்பலில் ஜமா மசூதி இருக்கும் இடத்தில் இந... மேலும் பார்க்க

சம்பலுக்கு நான் மட்டும் தனியாகச் செல்லவும் தயார்.. ஆனால்: ராகுல்

எதிர்க்கட்சித் தலைவராக சம்பலுக்கு செல்வது எனது உரிமை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதியை ஆய்வு செய்ய மக்களவை எதிர்க்கட்சித... மேலும் பார்க்க

ராகுலுக்கு அனுமதி மறுப்பு: மக்களவையில் இருந்து காங்கிரஸ் வெளிநடப்பு!

உத்தரப் பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்திற்குள் நுழைய மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுலுக்கு அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து மக்களவையிலிருந்து காங்கிரஸ் காங்கிரஸ் வெளிநடப்பு செய்தனர். மேலும் பார்க்க