செய்திகள் :

மகாராஷ்டிர தேர்தல்: அரசியல் தலைவா்கள், திரைப் பிரபலங்கள் வாக்களிப்பு!

post image

மகாராஷ்டிர தேர்தலையொட்டி முக்கிய அரசியல் தலைவா்கள், திரைப் பிரபலங்கள் ஆகியோர் வாக்களித்தனர்.

மகாராஷ்டிர பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று(நவ.20) காலை 7 மணிக்கு தொடங்கியது. மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு இன்று(நவ. 20) ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, இங்குள்ள 288 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தத் தேர்தலில் பொதுமக்கள், முக்கிய அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், கிரிக்கெட் பிரபலங்கள் உள்ளிட்டோர் காலை 6.30 மணி முதலே வாக்குச் சாவடிகளில் குவியத் தொடங்கினர். வாக்குப் பதிவு காலை 7 மணியளவில் தொடங்கியது.

மகாராஷ்டிர ஆளுநர் சிபி. ராதாகிருஷ்ணன், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் அவரது மனைவி, இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், அவரது மனைவி அஞ்சலி, மகள் சாரா, பாலிவுட் பிரபலங்கள் அக்‌ஷய் குமார், ராஜ்குமார் ராவ், கௌதமி கபூர் மும்பையில் வாக்குச் சாவடியில் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் தேர்தல்: 11 மணி நிலவரம்!

மகாராஷ்டிர பேரவைத் தேர்தலுக்கான 11 மணி வாக்குப்பதிவு நிலவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு இன்று(நவ. 20) ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, இங்குள்ள 288 தொகுதிக... மேலும் பார்க்க

மக்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: கார்கே, ராகுல் வேண்டுகோள்

புது தில்லி: மகாராஷ்டிரம் மற்றும் ஜார்க்கண்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்க... மேலும் பார்க்க

கயானா சென்றடைந்தார் மோடி!

கயானா நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்திய நேரப்படி புதன்கிழமை காலை சென்றடைந்தார்.மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, கடைசி கட்டமாக கயானாவில் ... மேலும் பார்க்க

தில்லி காற்று மாசு: 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய உத்தரவு!

தில்லியில் ஏற்பட்டுள்ள கடுமையான காற்று மாசுபாட்டால் 50 சதவீத அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து சுற்றுச்சூழல் அமைச்சர... மேலும் பார்க்க

பூஜ்யத்தில் குளிர்நிலை: 0.7 டிகிரி செல்சியஸ் தொட்டது ஸ்ரீநகர்!

ஜம்மு காஷ்மீர் என்றாலே மனதுக்குள் ஒரு சில்லென்ற உணர்வு தோன்றும். அந்த வகையில், ஸ்ரீநகரில், இந்த குளிர்காலத்தின் முதல் நாளாக நேற்று இரவு பூஜ்யத்தில் குளிர்நிலை பதிவாகியிருக்கிறது. மேலும் பார்க்க

மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

மகாராஷ்டிர பேரவைத் தேர்தலுக்கான 9 மணி வாக்குப்பதிவு நிலவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு இன்று(நவ. 20) ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, இங்குள்ள 288 தொகுதிக... மேலும் பார்க்க