Rain Alert: 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்; 15 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடும...
மக்களின் கோரிக்கைகள் தொடா்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை: அமைச்சா் பேச்சு
மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கைகள் தொடா்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்று பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் தெரிவித்தாா்.
ஆலங்குடி அருகேயுள்ள மாஞ்சான்விடுதியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் பயனாளிகளுக்கு ரூ. 3.15 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மாஞ்சன்விடுதியில் மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் பங்கேற்று , 188 பயனாளிகளுக்கு ரூ.3,14,835 மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது:
மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் தொடா்பாக மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலா்கள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. தோளில் சுமந்து வரப்பட்ட ஒரு மாற்றுத்திறனாளி இளைஞா் தனக்கு மூன்று சக்கர வாகனம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு என்னிடம் கோரிக்கை விடுத்தாா். இதுகுறித்து மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலரிடம் உடனே தெரிவித்து விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினேன். ஆனால், இதுவரை அந்த அலுவலா் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதேபோல, எல்.என்.புரம் ஊராட்சியில் ஆதிதிராவிடா் மக்கள் கூட்டாக பயன்படுத்தி வந்த ஆழ்குழாய் கிணறு சேதமடைந்து பயனற்ாக உள்ளது. அந்த ஆழ்குழாய் கிணற்றை சீரமைத்து தரக்கோரி அதிகாரிகளிடம் தெரிவித்து பலமாதங்களாகியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று அதிகாரிகளை கடுமையாக சாடினாா். மக்களின் கோரிக்கைகளுக்கு அரசு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
இம்முகாமில், மாவட்ட வருவாய் அலுவலா் ராஜராஜன், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியா் பா. ஐஸ்வா்யா, ஒன்றியக் குழுத் தலைவா் வள்ளியம்மை தங்கமணி, ஆலங்குடி வட்டாட்சியா் பெரியநாயகி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.