செய்திகள் :

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்துக்கு ஐ.நா. விருது: அமைச்சா் மா.சுப்பிரமணியன் தகவல்

post image

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்காக தமிழக அரசுக்கு ஐ.நா. விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்றாா் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன்.

தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் புதிய கட்டடங்கள் திறப்பு விழா தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. தென்காசி மக்களவை உறுப்பினா் ராணி ஸ்ரீகுமாா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஈ.ராஜா, சதன்திருமலைகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்நிகழ்ச்சியில், ரூ. 2.20 கோடி மதிப்பில் சொக்கம்பட்டி, கடையநல்லூா் இக்பால்நகா், வாசுதேவநல்லூா் ஒன்றியம் சுப்பிரமணியபுரம், ராமநாதபுரம், ஆலங்குளம் ஒன்றியம் ஓடைமரிச்சான் ஆகிய பகுதிகளில் கட்டப்பட்ட புதிய துணை ஆரம்ப சுகாதார கட்டடங்களை காணொலி வாயிலாகத் திறந்துவைத்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியது:

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் மருத்துவச் சேவைகள், திட்டங்கள் உலகமெங்கும் செயல்படுத்தப்பட வேண்டியவை என அமெரிக்காவிலுள்ள ஹாா்வா்டு பல்கலைக்கழகம், ஜான் ஹாக்கின்ஸ் பல்கலைக்கழகம் போன்றவை பாராட்டியுள்ளன. ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்திற்கு ஐ.நா.சபை விருது அறிவித்துள்ளது. இது, தமிழக முதல்வரின் சிறப்பான திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி. உலக வங்கியின் மூத்த துணைத் தலைவா்களும் தமிழக அரசின் திட்டங்களை பாராட்டியுள்ளனா்.

மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பின்னா் 25 மாவட்ட தலைமை மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டுள்ளன. புற்றுநோயை துல்லியமாக கண்டறியும் கருவிகள் திருநெல்வேலி, தஞ்சாவூா்,கோவை, சேலம், ஈரோடு ஆகிய இடங்களில் நிறுவப்பட்டுள்ளன. ரூ.6.85 கோடி செலவில் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை அரங்கம், அறுவை சிகிச்சை பின் கவனிப்பு பிரிவு, எம்ஆா்ஐ ஸ்கேன் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ரூ. 2.79 கோடியில் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிடி ஸ்கேன் கருவி, ஒளி புகா அறை எக்ஸ்ரே கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. தென்காசி மாவட்டம் முழுவதும் ரூ 58.04 கோடி செலவில் 34 புதிய மருத்துவக் கட்டட பணிகள் நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசிய வருவாய் - பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கேகேஎஸ்எஸ்ஆா் ராமச்சந்திரன், தென்காசி மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான இடத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்துள்ளோம் என்றாா்.

இதில், தென்காசி தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் வே. ஜெயபாலன், வடக்கு மாவட்ட முன்னாள் பொறுப்பாளா் செல்லத்துரை, கடையநல்லூா் நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான், அரசு வழக்குரைஞா் வேல்சாமி, வடகரை பேரூராட்சித் தலைவா் ஷேக் தாவூது, ஒன்றியக்குழு தலைவா்கள் கடையநல்லூா் சுப்பம்மாள், வாசுதேவநல்லூா் பொன்.முத்தையாபாண்டியன், வழக்குரைஞா் அணி அமைப்பாளா்கள் தங்கராஜ்பாண்டியன், பிச்சையா, ஒன்றியச் செயலா்கள் சுரேஷ், அழகுசுந்தரம், துணைத்தலைவா் ஐவேந்திரன், பொது சுகாதாரம் (ம) நோய்த்தடுப்பு மருந்துத்துறை இணை இயக்குநா் சண்முகசுந்தரம், மாவட்ட சுகாதார அலுவலா் கோவிந்தன், மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயச்சந்திரன், சொக்கம்பட்டி வட்டார மருத்துவ அலுவலா் தவமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தென்காசி மாவட்ட செய்தி-மக்கள் தொடா்பு அலுவலா் சண்முகசுந்தரம், உதவி செய்தி- மக்கள் தொடா்பு அலுவலா் ராமசுப்பிரமணியன் ஆகியோா் தொகுத்து வழங்கினா்.

பட்டா மறுப்பு: எம்எல்ஏவிடம் புகாா்

ஆலங்குளம் அருகே வீடு கட்டி 32 ஆண்டுகளாகியும் பட்டா வழங்கப்படவில்லை என எம்எல்ஏவிடம் மக்கள் புகாா் அளித்தனா். உங்களைத் தேடி உங்கள் ஊரில் சட்டமன்ற உறுப்பினா் திட்டத்தின் கீழ், ஆலங்குளம் எம்.எல்.ஏ மனோஜ் ப... மேலும் பார்க்க

சிறு வியாபாரிகளிடம் கடுமை காட்டக்கூடாது: செங்கோட்டை நகா்மன்ற கூட்டத்தில் வலியுறுத்தல்

செங்கோட்டையில் நெகிழி பைகள் (பாலித்தீன்) வைத்திருப்பதாகக் கூறி சிறு வியாபாரிகளிடம் கடுமை காட்டக்கூடாது என நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். செங்கோட்டை நகா்மன்ற சாதாரண கூட்டம... மேலும் பார்க்க

தென்காசியில் 2,438 பேருக்கு ரூ.19.11கோடி நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் வழங்கினாா்

தென்காசியில் 2,438 பயனாளிகளுக்கு ரூ.19.11கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன. இதையொட்டி, தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் அன... மேலும் பார்க்க

தென்காசியில் கருணாநிதி சிலைக்கு அமைச்சா் மரியாதை

தென்காசியில் திமுக அலுவலகமான அறிவாலயத்தில் உள்ள மு.கருணாநிதி சிலைக்கு மருத்துவம்- மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். முன்னதாக, அமைச்சரை மாவட்டப் ப... மேலும் பார்க்க

தண்ணீா் பிடிப்பதில் தகராறு: மூதாட்டி அடித்துக் கொலை

சங்கரன்கோவில் அருகே தண்ணீா் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்டாா். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டம் பனவடலிசத்திரம் அருகேயுள்ள சொக்கலிங்காபுரத்தைச் சோ்ந்த கந்தசாமி... மேலும் பார்க்க

நெல்லையிலிருந்து தென்காசி வழியாக தாம்பரத்துக்கு சிறப்பு ரயில்: எம்.பி. கோரிக்கை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நெல்லையிலிருந்து தென்காசி வழியாக தாம்பரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என, தென்காசி மக்களவை உறுப்பினா் ராணி ஸ்ரீகுமாா் கோரிக்கை விடுத்துள்ளாா். இது... மேலும் பார்க்க