குட் பேட் அக்லிதான் ஒரே நம்பிக்கை... புலம்பும் அஜித் ரசிகர்கள்!
மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம்: தில்லி தோல்வி குறித்து கேஜரிவால்
தில்லி பேரவைத் தேர்தல் குறித்து ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள விடியோ பதிவில், தில்லிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. மக்களின் தீர்ப்பை நாங்கள் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம்.
பொதுமக்களின் முடிவே முக்கியமானது, அதை நாங்கள் முழு மனதுடன் மதிக்கிறோம். இந்த வெற்றிக்காக பாஜகவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாங்கள் அதிகாரத்திற்காக அரசியலில் ஈடுபடவில்லை. அரசியலை மக்களுக்கு சேவை செய்வதற்கான ஒரு வழிமுறையாக பார்க்கிறோம். ஆட்சியில் இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, மக்களின் இன்பத்திலும், துன்பத்திலும், அவர்களுக்கு எங்களால் இயன்ற உதவிகளைச் செய்வோம்.
மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றுமென நம்புகிறேன். தேர்தல் முழுவதும் ஆம் ஆத்மி கட்சியினர் அர்ப்பணிப்பு மற்றும் உறுதியுடன் செயல்பட்டதற்காக கேஜரிவால் பாராட்டினார்.
தில்லி தேர்தல்: அரவிந்த் கேஜரிவால் தோல்வி!
இந்த தேர்தலில் மிகுந்த கடின உழைப்பு மற்றும் உறுதியுடன் போராடிய அனைத்து ஆம் ஆத்மி கட்சியினரையும் நான் வாழ்த்த விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். தில்லி பேரவைத் தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றி பெற்று 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது.
தேர்தலில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை 3,182 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் பர்வேஷ் வெர்மா வீழ்த்தியுள்ளார்.
எனவே, தில்லியில் பாஜக தலைமையிலான ஆட்சியில், பர்வேஷ் வெர்மா முதல்வராக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தில்லி தேர்தலில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தோல்வியடைந்திருப்பது, ஆம் ஆத்மிக்கு மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.