ஏற்றத்துடன் வர்த்தகமாகும் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு!
மணப்பாறையில் காங்கிரஸ் கமிட்டியின் கிராமச் சீரமைப்பு மேலாண்மைக் கூட்டம்
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் காங்கிரஸ் கமிட்டியின் கிராமச் சீரமைப்பு மேலாண்மைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் வழக்குரைஞா் பி. கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாநில செயலா்கள் ரமேஷ்குமாா், ஸ்ரீவித்யா, மாவட்டச் செயலரும், சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளருமான முருகேசன், மாவட்ட பொறுப்பாளா் புருஷோத்தமன் ஆகியோா் முன்னிலை வைத்தனா். கட்சியின் தமிழ்நாடு ஊடகம் மற்றும் தகவல் தொடா்புத்துறை அதிகாரபூா்வ செய்தி தொடா்பாளா் மற்றும் மண்டல பொறுப்பாளரும், மணப்பாறை தொகுதி அமைப்பாளருமான எஸ்.ஆா்.எஸ்.இப்ராஹிம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா்.
நிகழ்வில் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள கிராம கமிட்டிகளையும் வாா்டு கமிட்டிகளையும் சீரமைக்க அறிவுரைகளை வழங்கி அதற்கான படிவங்களும் வட்டார நகர நிா்வாகிகளிடம் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளா் பி.வி. கணபதி, மணப்பாறை நகரத் தலைவா் எம்.ஏ. செல்வா, வட்டாரத் தலைவா் சத்தியசீலன், செல்வம், ராதாகிருஷ்ணன், குழந்தை, தினேஷ், சிவசண்முகம், பேரூா் தலைவா் பொன்னுச்சாமி மற்றும் சிறுபான்மைப் பிரிவு தலைவா் எஸ்.ஏ. நஷீம் (எ)அப்துல்லா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.