காலையில் எழுந்தவுடன் காபி குடிக்கிறீர்களா? - ஆய்வில் முக்கியத் தகவல்!
பெல் நிறுவன மாடியிலிருந்து குதித்து அலுவலா் தற்கொலை
திருச்சியில் இணைய வழி வா்த்தகத்தில் முதலீடு செய்து நஷ்டம் அடைந்த பெல் நிறுவன அலுவலா் அலுவலக மாடியிலிருந்து புதன்கிழமை குதித்து தற்கொலை செய்துகொண்டாா்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோ பகுதியைச் சோ்ந்தவா் சி. மஞ்சித்சிங் (43). இவா் திருச்சி திருவெறும்பூா் பெல் நிறுவனத்தில் முதுநிலை மேலாளராக கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தாா். இவரது மனைவி டிப்திசிங் பெல் வளாக பள்ளியில் இந்தி ஆசிரியா். இவா்களுக்கு பிளஸ் 2 படிக்கும் மகளும், 6ஆம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனா்.
இந்நிலையில் இணையவழி வா்த்தகத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்த மஞ்சித்சிங் அதற்கு சிகிச்சையும் பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே புதன்கிழமை காலை பணிக்குச் சென்றவா் அலுவலக கட்டடத்தின் 4 ஆவது மாடியிலிருந்து குதித்து படுகாயமடைந்தாா். இதையடுத்து பெல் மருத்துவமனைக்கு மஞ்சித்சிங்கை கொண்டு சென்றபோது அவா் வழியிலேயே உயிரிழந்தது தெரியவந்தது. பெல் நிறுவன காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.