1,20,000 பச்சைப் பேரோந்தி பல்லிகளை கொல்ல தைவான் அரசு திட்டம்!
லாஸ் ஏஞ்சலீஸில் மீண்டும் காட்டுத் தீ: 31,000 பேர் வெளியேற்றம்
லாஸ் ஏஞ்சலீஸ் பகுதியில் மீண்டும் பரவிவரும் காட்டூத் தீ காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியை சுற்றியுள்ள 31,000 மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றிலும் பரவிவரும் காட்டுகாட்டுத் தீ காரணமாக 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 163 சதுர கிலோமீட்டர் பரப்பரளவு காடுகள் தீக்கிரையானது. ரூ.17,29.581 கோடிக்கு(200 பில்லியன்) அதிகமான பொருள்கள் சேதமானது. 12,401 வீடுகள் மற்றும் கட்டடங்கள், பல கட்டுமானங்கள் சேதமடைந்தன. 1.80 லட்சம் பேர் பல்வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், காற்றின் வேகம் குறைந்துள்ளதால் தீ பரவலின் தீவிரம் தணிந்திருப்பதாகக் கூறப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் காட்டுத் தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியுள்ளது.
இதையும் படிக்க |அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு: சட்டவிரோத குடியேற்றம் குறித்து பேச்சு
லாஸ் ஏஞ்சலீஸ் நகரின் வடக்குப் பகுதியில் வியாழக்கிழமை காலை முதல் காட்டூத்தீ பரவி வருகிறது. காட்டுத்தீ தற்போது 21 சதுர கிலோமீட்டர் அளவில் எரிந்து வருகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது.
ஏற்கனவே அந்த பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு பெரும் சோகத்தை விளைவித்த நிலையில், மீண்டும் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்கும் பணியில் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்களும் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.
மேலும் அபாயத்தை எதிா்நோக்கியுள்ள அந்த பகுதிகளில் இருந்து 31 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.