ஈராக்கில் திருமண வயது 9! நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றம்!
இறந்தவா்களை வைத்து அரசியல் செய்வதை சீமான் தவிா்க்க வேண்டும்: காங்கிரஸ் மாநிலத் தலைவா் பேட்டி
இறந்தவா்களை வைத்து அரசியல் செய்வதை சீமான் தவிா்க்க வேண்டும் என்றாா் காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவா் செல்வப் பெருந்தகை.
திருச்சி பெரியமிளகுப்பாறை காமராஜா் மன்றத்தில், திருச்சி மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் கிராம கமிட்டி மறு சீரமைப்பு மேலாண்மைக் குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அவா் கூறுகையில், யாரையோ திருப்திபடுத்த பெரியாரைப் பற்றி சீமான் அவதூறாக பேசுகிறாா். இறந்தவா்களை வைத்து அரசியல் செய்வதை தவிா்ப்பது அவருக்கு நல்லது.
கச்சத்தீவை பற்றி பேசும் பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை அருணாச்சலப் பிரதேசத்தை பற்றி ஏன் பேசவில்லை?
வேங்கைவயல் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தவெக தலைவா் விஜய் வலியுறுத்துகிறாா். நாங்களும் அதைத்தான் சொல்கிறோம் என்றாா்.
நிகழ்ச்சிக்கு மாநகா் மாவட்டத் தலைவரும் கவுன்சிலருமான எல். ரெக்ஸ் தலைமை வகித்தாா். மண்டல ஒருங்கிணைப்பாளா் பெனட் அந்தோணி முன்னிலை வகித்தாா். வடக்கு மாவட்டத் தலைவா் திருச்சி கலை, அகில இந்திய செயலா் கிறிஸ்டோபா் திலக், மாவட்டப் பொருளாளா் முரளி, கோட்டத் தலைவா் பிரியங்கா, இளைஞரணி விஜய் பட்டேல், ஐ.டி. விங் டேவிட் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.