1,20,000 பச்சைப் பேரோந்தி பல்லிகளை கொல்ல தைவான் அரசு திட்டம்!
`அவரை சந்தித்தது மறக்க முடியாதது'- உதவியதற்கு நன்றி சொன்ன சைஃப் அலிகான்; நெகிழும் ஆட்டோ ஓட்டுநர்
பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் கடந்த வாரம் மும்பை பாந்த்ராவில் உள்ள வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தபோது திருடும் நோக்கத்தில் மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்தார். பஹிர் என்ற அந்த நபரை சைஃப் அலிகான் பிடிக்க முயன்றபோது பிளேடால் தாக்கப்பட்டார். இதனால் காயம் அடைந்த சைஃப் அலிகான் மருத்துவமனையில் 5 நாட்கள் தங்கி சிகிச்சை பெறவேண்டிய நிலை ஏற்பட்டது. பிளேடால் தாக்கப்பட்டவுடன் சைஃப் அலிகானை மருத்துமனைக்கு கொண்டு செல்ல காரை பார்க்கிங்கில் இருந்து வெளியில் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து உடனே அந்த வழியாக வந்த ஆட்டோவில் ஏறி மருத்துவமனைக்கு சென்றார். ஆட்டோ டிரைவர் அந்த நேரத்தில் சைஃப் அலிகானிடமிருந்து பணம் எதுவும் வாங்கவில்லை. தற்போது சிகிச்சை முடிந்து வீடு வந்துள்ள சைஃப் அலிகான் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு புறப்படும் முன்பு தன்னை ஆட்டோவில் மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்த ஆட்டோ டிரைவரை மருத்துவமனைக்கு அழைத்து நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆட்டோ டிரைவர் பஜன் சிங் கூறுகையில்,''நான் வீட்டில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தபோது நடிகரின் உதவியாளர் எனக்கு போன் செய்து உங்களுக்கு சைஃப் அலிகான் நன்றி சொல்ல விரும்புகிறார் என்று தெரிவித்தார். உடனே நான் மருத்துவமனைக்கு சென்றேன். மருத்துவமனை அறைக்குள் நுழைந்தபோது எனக்கு அனைவரும் நன்றி சொன்னார்கள். நடிகர் என்னை கட்டிப்பிடித்து நன்றி சொன்னார். என்ன உதவி வேண்டுமானாலும் தன்னிடம் கேட்கும்படி சொன்னார். நடிகர் சைஃப் அலிகானுடன் நேரத்தை செலவிட்டது எனது வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒன்றாகும். 25 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டுகிறேன். 25 ஆண்டுகளில் முதல் முறையாக நடிகர் ஒருவர் எனது ஆட்டோவில் பயணம் செய்துள்ளார்'' என்றார்.
சைஃப் அலிகான் தாக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு போலீஸார் பாதுகாப்பு கொடுக்க முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் அவருக்கு 24 மணி நேரமும் ஒரு போலீஸ்காரர் பாதுகாப்பு கொடுப்பார் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சைஃப் அலிகானை குத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட பிளேட் சைஃப் அலிகான் வீட்டில் இருந்து 1.5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள குளத்திற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டுள்ள பஹிரை சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று தேடியபோது அந்த பிளேட் கண்டுபிடிக்கப்பட்டது. ஏற்கனவே சைஃப் அலிகான் முதுகு தண்டுவடப்பகுதியில் இருந்து பிளேடின் முனை கண்டுபிடிக்கப்பட்டது. பிளேடின் இரண்டாவது பகுதி சைஃப் அலிகான் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. மூன்றாவது பகுதி குளத்திற்கு அருகில் மீட்கப்பட்டுள்ளது.