"காஸாவில் நடக்கும் போருக்கு மோடியும் காரணம்" - நடிகர் பிரகாஷ்ராஜ் காட்டம்
மணிப்பூரில் துணை ராணுவப் படை வாகனம் மீது துப்பாக்கிச்சூடு: வீரர் பலி
மணிப்பூரில் துணை ராணுவப் படை வாகனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் வீரர் ஒருவர் பலியானார்.
மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் துணை ராணுவப் படையினரின் வாகனத்தை குறிவைத்து ஆயுதமேந்திய கும்பல் வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவத்தில் அசாம் ரைபிள்ஸ் படையைச் சேர்ந்த வீரர் பலியானார்.
மேலும் மூன்று பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாலை 6 மணியளவில் நம்போல் சபால் லெய்கய் பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக அவர்கள் மேலும் கூறினர். இதுகுறித்து அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், இம்பாலில் இருந்து பிஷ்ணுபூர் மாவட்டத்தை நோக்கி அசாம் ரைபிள்ஸ் வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது துப்பாக்கி ஏந்திய கும்பல் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தியது.
மும்பையில் ஆப்பிள் ஐபோனுக்காக சண்டையிட்ட இளைஞர்கள்
இதில் வீரர் ஒருவர் பலியானார். மூன்று பேர் காயமடைந்தனர் என்றார். காயமடைந்தவர்களை போலீஸார் மற்றும் உள்ளூர்வாசிகள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக மற்றொரு அதிகாரி கூறினார்.
மணிப்பூரில் குகி - மைதேயி இனக்குழுக்களிடையே ஏற்பட்ட கலவரத்திற்குப் பிறகு முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி அம்மாநிலத்திற்கு அண்மையில் சென்றார்.