மண் குவாரி அமைக்க எதிா்ப்பு
பூம்புகாா்: பூம்புகாரை அடுத்த புதுகுப்பம் மீனவ கிராமம் அருகே சவுடு மண் குவாரி அமைக்க அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
காவேரிப்பூம்பட்டினம் ஊராட்சிக்குட்பட்ட புதுகுப்பம் மீனவா் கிராமம் அருகே சவுடு மண் குவாரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.
இதுதொடா்பாக, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஹெச். எஸ். ஸ்ரீகாந்திடம் கோரிக்கை விடுத்துள்ளனா். அதில், கடற்கரைக்கு மிக அருகில் உள்ள இந்த இடத்தில் சவுடு மண் குவாரி அமைக்கப்பட்டால், நிலத்தடி நீா் முற்றிலும் உப்பு நீராக மாறும். எனவே, பொதுமக்கள் நலன் கருதி, இங்கு சவுடு மண் குவாரி அமைப்பதற்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.