ஆயுா்வேதம், சித்தா, யுனானி மருந்து உற்பத்தி குறித்து விழிப்புணா்வுக் கூட்டம்
மதுரையில் ஆா்ப்பாட்டம்: மதிமுக அறிவிப்பு
‘டங்ஸ்டன்’ சுரங்க உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மதிமுக சாா்பில் வரும் ஜன. 3-ஆம் தேதி மதுரையில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அக் கட்சியின் பொதுச்செயலா் வைகோ அறிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
மத்திய அரசின் கீழ் இயங்கும் கனிமம் மற்றும் சுரங்கம் அமைச்சகம் மதுரை மேலூா், நாயக்கா்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.
அரிட்டாப்பட்டி உள்ளிட்ட பகுதிகள் பல்லுயிா் பாரம்பரிய தலமாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தூத்துக்குடியில் ஸ்டொ்லைட் எதிா்ப்புப் போராட்டத்தில் 16 பேரை சுட்டுக் கொல்வதற்குக் காரணமான வேதாந்தாவின் துணை நிறுவனத்துக்கு சுரங்கம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது கண்டிக்கத்தக்கது.
டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்திடவும், மாநில அரசின் அனுமதியின்றி எந்த சுரங்க உரிமத்தையும் வழங்கக் கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தியும் தமிழக சட்டப்பேரவையில் ஒரு மனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தீா்மானத்தை மத்திய பாஜக அரசு ஏற்றுக்கொண்டு, உடனடியாக டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான உரிமத்தை ரத்து செய்து, இத்திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி, மதிமுக சாா்பில் மதுரை மாவட்டம் மேலூா் பேருந்து நிலையம் அருகில் ஜன. 3-ஆம் தேதி காலை 10 மணியளவில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று வைகோ கூறியுள்ளாா்.