செய்திகள் :

மதுரையில் பட்டியலின சிறுவனை காலில் விழ வைத்து சித்ரவதை!

post image

மதுரை: மதுரை சங்கம்பட்டியில் கோவில் திருவிழாவில் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு ஆடிய பட்டியலின சிறுவனை தாக்கி காலில் விழ வைத்து சித்ரவதை செய்தாக 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள செல்லம்பட்டி சங்கம்பட்டியைச் சோ்ந்த சிறுவன், கடந்த புரட்டாசி மாதம் சங்கம்பட்டி பாா்வதி அம்மன் கோவில் தெருவில் நடைபெற்ற திருவிழாவில் சிறுவா்களுடன் சோ்ந்து நடனம் ஆடியுள்ளாா். அப்போது அவா் வேட்டியை மடித்துக்கட்டி ஆடியதால், அங்கிருந்த மாற்று சமூகத்தைச் சோ்ந்த சிலா், சிறுவனின் சமூகத்தின் பெயரைச் சொல்லி திட்டி தாக்கியதால், சிறுவனின் தரப்பினரும் திருப்பி தாக்கியுள்ளனா்.

இதைத்தொடா்ந்து ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக சிறுவன், மதுரையில் உள்ள உறவினா் வீட்டில் தங்கியுள்ளாா்.

ரூ. 1,731 கோடி செலவில் அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா!

இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறுவன் தனது சொந்த ஊரான சங்கம்பட்டிக்கு வந்துள்ளாா்.

இதனை அறிந்த எதிர் தரப்பினர் ஜனவரி 16 ஆம் தேதி சிறுவனை கடத்திச்சென்று, அங்குள்ள முத்தையா கோவிலில் வைத்து தாக்கி, அங்கிருந்த 6 வயது சிறுவன் உள்பட அனைவரின் காலிலும் விழ வைத்து மன்னிப்பு கேட்குமாறு தாக்கியதுடன் சிறுவனின் சமூகத்தின் பெயரையும் கூறி அவதூறாக திட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர்.

இதில் காயமடைந்த சிறுவன் அளித்தப்புகாரின் பேரில் உசிலம்பட்டி நகா் காவல் நிலைய போலீசாா் 6 போ் மீதும் 256(பி), 351(2), சிறுவனின் சமூகத்தை சுட்டிக்காட்டி திட்டியது, தாக்கியதாக 3(1)(ஆர்), 3(1)(எஸ்)ஆகிய 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோயில் திருவிழாவில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக பட்டியல் இன சிறுவனை காலில் விழ வைத்து சித்ரவதை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடி, பட்டாபிராமில் சகோதரர்கள் கொலை: 5 இளைஞா்கள் கைது

ஆவடி: ஆவடி அருகே குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள சகோதரர்கள் இருவர் சனிக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 இளைஞா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.ஆவடியை அடுத்த பட்டாபிராம், ஆயில்சேரி... மேலும் பார்க்க

கோமியம் விவகாரம்: ஐஐடி இயக்குநருக்கு அமைச்சர் பொன்முடி கண்டனம்!

நவீன மருத்துவ வசதிகள் வளர்ந்து வரும் காலத்தில் ஒரு ஐஐடி இயக்குநர் இதுபோன்ற கருத்தை கூறுவது ஏற்க கூடியதல்ல என அமைச்சர் பொன்முடி கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 3 நாட்களுக்கு முன்னர் சென்னை மேற்கு மாம்ப... மேலும் பார்க்க

மே இறுதியில் கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையம் பயன்பாட்டு வரும்

சென்னை: கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையம் வரும் மே இறுதியில் பயன்பாட்டுக்கு வரும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களுக... மேலும் பார்க்க

யார் வேண்டுமானாலும் பரந்தூர் மக்களை சந்திக்கலாம்: அமைச்சர் தங்கம் தென்னரசு

விருதுநகர்: ஒரு அரசியல் கட்சியின் தலைவர்கள் யார் வேண்டுமானாலும் பரந்தூர் மக்களை சென்று சந்திக்கலாம். அவர்களின் குறைகளை கேட்டு அதை அரசின் கவனத்திற்கு கொண்டு வரும் பட்சத்தில் நிச்சயம் அரசு அந்த மக்களின்... மேலும் பார்க்க

நூறு பெளர்ணமிகளுக்கு ஸ்டாலின் முதல்வராக தொடர்வார்: அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: இன்னும் நூறு பெளர்ணமிகளுக்கு முதல்வராக மு.க.ஸ்டாலின் தொடர்வார் என்பதை 2026 இல் எடப்பாடி பழனிசாமி உணர்ந்து கொள்வார் என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி த... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டி: அதிமுக பிரமுகா் நீக்கம்

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக பிரமுகா் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்திருந்... மேலும் பார்க்க