செய்திகள் :

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அஷ்டமி சப்பர வீதியுலா!

post image

மதுரை மீனாட்சியம்மன் கோயில் அஷ்டமி சப்பர விழா இன்று(டிச. 23) நடைபெற்று வருகிறது. வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி முழக்கங்கள் முழங்க சாமி தரிசனம் செய்தனர்.

உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

அந்தவகையில் மார்கழி மாதத்தில், உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் இறைவன் படியளகப்பதைக் குறிக்கும் வகையில் நடைபெறுவது அஷ்டமி சப்பர விழாவாகும்.

மார்கழி மாத தேய்பிறை அஷ்டமி நாளான இன்று சுவாமிக்கும் அம்மனும் அதிகாலை பல்வேறு சிறப்புப் பூஜை, அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது.

இதனையடுத்து கோயிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடனும், மீனாட்சியம்மன் தனித்தனி சப்பரங்களில் எழுந்தருளினர்.

சிவனடியார்கள் கயிலாய வாத்தியம் முழங்க கீழமாசியில் வீதியில் புறப்பாடாகிய சப்பரமானது யானைக்கல், கீழ வெளி வீதி, தெற்குவெளிவீதி, மேலவெளிவீதி, வக்கீல் புதுத்தெரு வழியாக வலம் வந்து மீண்டும் கோயிலுக்கு வந்தடையும்.

இந்த அஷ்டமி சப்பர திருவிழாவில் மீனாட்சியம்மன் எழுந்தருளியுள்ள சப்பரத்தை பெண் பக்தர்கள் மட்டுமே வடத்தினை பிடித்து இழுத்துசெல்வது தனிச்சிறப்பாகும்.

நான்கு வெளி வீதிகளிலும் சப்பரத்தில் வலம் வந்த சுவாமி அம்மனை வழிநெடுகிலும், ஆயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்துவருகின்றனர்.

சப்பரத்தின் முன்பாக சிவாச்சாரியார்கள் அரிசியை தூவியபடி செல்லும்போது கீழே சிதறிக்கிடந்த அரிசியைக் கூடியிருந்த பக்தர்கள் எடுத்துக் கொண்டு வீடுகளுக்குச் செல்வர்.

இந்த அரிசியை வீட்டில் வைத்து வேண்டிக்கொண்டால், நோய் நொடி நீங்கி பசிப்பிணி நீங்கும் என்பது நம்பிக்கை

மதுரையில் வாழ்ந்து அஷ்டமி பிரதட்சிணம் செய்வோர்க்குத் துன்பம் நீங்கி முக்தி கிடைப்பது உறுதி என்றும் இறைவன் சிவன் கூறியதை நிகழ்த்தும் வகையிலான நடைபெறும் இந்த அஷ்டமி சப்பர விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிநெடுகிலும் சாமி தரிசனம் செய்துவருகின்றனர்.

தொழிலதிபரை மணம் புரிந்த பி.வி.சிந்து!

நட்சத்திர பாட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து பிரபல தொழிலதிபரை மணம் புரிந்துள்ளார்.இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் பாட்மின்டனில் இரண்டு முறை பதக்கங்களை வென்று கொடுத்தவர் பி.வி.சிந்து. அவர் கடந்த 2... மேலும் பார்க்க

பெண்ணைக் கொன்று நகைகளைத் திருடிய நபர் கைது!

மகாராஷ்டிரத்தின் பன்வல் கிராமத்தில் பெண்ணைக் கொன்று அவரது நகைகளை திருடிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் ரயிகாட் மாவட்டத்திலுள்ள பன்வல் எனும் கிராமத்தில் கடந்த அக்டோபர் 7 அன்று சங்கீத... மேலும் பார்க்க

98 கங்காருகளைக் கொன்ற நபர் கைது!

ஆஸ்திரேலியாவில் 98 கங்காருகளைக் கொன்ற 43 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த அக்டோபர் மாதம் 8 ஆம் தேதியன்று ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலுள்ள சிங்கள்டன் எனும் ஊரிலுள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் சு... மேலும் பார்க்க

ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த 3 வயது குழந்தை!

ராஜஸ்தான் மாநிலம் கோட்புட்லி- பெஹ்ரோர் மாவட்டத்தில் விவசாய நிலத்திலுள்ள ஆழ்துளைக் கிணற்றுக்குள் 3 வயது பெண் குழந்தை தவறி விழுந்துள்ளது. கோட்புட்லி- பெஹ்ரோர் மாவட்டத்தைச் சேர்ந்த சேத்துனா (வயது 3) என்ற... மேலும் பார்க்க

கோயிலில் சிலிண்டர் வெடிப்பு! 9 ஐயப்ப பக்தர்கள் படுகாயம்!

கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளியிலுள்ள சிவன் கோயிலில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 9 ஐயப்ப பக்தர்கள் படுகாயமடைந்துள்ளனர்.ஹூப்பள்ளியின் சாய் நகர் பகுதியிலுள்ள சிவன் கோயிலின் அறையில் நேற்று இரவு ஐயப்ப... மேலும் பார்க்க

நச்சுத் தன்மையுள்ள கடல்மீன் கடித்த மீனவருக்கு சிகிச்சை!

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யத்துக்கு அப்பால் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, நச்சுத் தன்மையுடைய மீன் கடித்த மீனவர் ஒருவர் மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.நாகை மாவட்டம... மேலும் பார்க்க