செய்திகள் :

மதுரை முல்லை நகர்: "நீர்ப்பிடிப்புப் பகுதியில் அரசாங்கம் மட்டும் வீடு கட்டலாமா?" - செல்லூர் ராஜூ

post image

மதுரையில் அண்மையில் பெய்த கனமழையில் பீபி குளம், முல்லை நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து பீபிகுளம் கண்மாய்ப் பகுதியில் அமைந்துள்ள முல்லை நகரிலுள்ள 500-க்கும் மேற்பட்ட வீடுகளை இடிப்பதற்கு உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

முல்லை நகர் மக்கள்

இதை எதிர்த்து முல்லை நகர்ப் பகுதி மக்கள் கடந்த சில நாட்களாகக்  காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டத்துக்கு தி.மு.க-வைத் தவிர்த்து பல்வேறு கட்சிகள் ஆதரவளித்து வருகின்றன.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சந்தித்து ஆதரவு கொடுத்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசியவர், "இந்த முல்லை நகர்ப் பகுதி மக்கள் மழை வெள்ளத்தால் மிகப்பெரிய அளவிற்குப் பாதிப்படைந்தனர். அப்படியுள்ள நிலையில் இவர்களை இங்கிருந்து காலி செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

நீர்ப் பிடிப்புப் பகுதியில் மக்கள் வசித்தால் காலி செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் சொல்கிறது. ஆளுகின்ற தி.மு.க கட்சியினர்தான் மக்கள் பிரச்னைகளில் அரசியல் செய்வார்கள். இங்கு வசிக்கக்கூடிய மக்கள் வங்கிகளில் கடன் வாங்கி வீடு கட்டி உள்ளனர்.

முல்லை நகர்ப் பகுதிக்கு வரக்கூடிய தண்ணீர் என்பது கழிவு நீர் வாய்க்கால் வழியாக வருகிறது. வாய்க்கால்களில் கழிவு நீரை அப்புறப்படுத்துவதற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்குள்ள மக்களை அரசாங்கம் காலி செய்யக்கூடாது என்பது எங்களுடைய கோரிக்கை. இவர்களுக்குப் பட்டா கொடுப்பதற்குக் குடிசை மாற்று வாரியம் மூலமாகப் பணம் வசூல் செய்துள்ளார்கள். குருவி சேர்ப்பது போலப் பணம் சேர்த்து ஏழை மக்கள் கட்டியுள்ள வீடுகளை இடித்தால் அவர்களின் வாழ்க்கை நசுங்கிப் போகும்.

செல்லூர் ராஜூ

இந்த அரசாங்கம் தாயுள்ளதோடு பரிசீலித்து நல்ல முடிவு எடுக்க வேண்டும். இன்னும் ஓராண்டுக் காலத்தில் தேர்தல் வரப்போகிறது. இங்குள்ள மக்கள் ரேஷன் கார்டு வைத்துள்ளார்கள். மாநகராட்சி வரி, குடிநீர், குப்பை வரி என அனைத்தும் கட்டி வருகிறார்கள். முல்லை நகர்ப் பகுதி மக்களைப் பாதுகாக்க இந்த அரசாங்கம் முன்வர வேண்டும். அப்புறப்படுத்தும் நடவடிக்கையை அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும். பல்வேறு நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் அரசாங்கமே கட்டடங்கள் கட்டியுள்ளது. நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. எங்கள் அரசாங்கம் இருந்தபோது இப்பகுதி மக்களுக்குப் பாதுகாப்பு கொடுத்துள்ளோம். இப்பகுதி மக்களுக்கு நியாயம் வேண்டும். ஏழை எளிய மக்கள் வாழக்கூடிய பகுதி இது. 60 70 வருடமாக மக்கள் இங்கு வாழ்ந்து வருகிறார்கள். மதுரையில் பல நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் அரசாங்க கட்டடங்கள் உள்ளது.

இங்கே விவசாய நிலம் இல்லை. இது நீர் பிடிப்பு பகுதியே கிடையாது. இதை அமைச்சர் மூர்த்தி புரிந்து கொள்ள வேண்டும். இங்கு ஆறுகளிலிருந்து தண்ணீர் வரவில்லை. நீர் செல்லக்கூடிய வாய்க்காலைக் கட்டினாலே இப்பிரச்னை தீர்ந்துவிடும்.

முல்லை நகர் மக்கள்

அரசாங்கம் கட்டடம் கட்டினால் ஏற்றுக்கொள்ளலாம். ஏழை மக்கள் வீடு கட்டினால் இடிக்கலாமா? அமைச்சர் மூர்த்தியை நான் கேட்கிறேன். முதலில் அரசாங்கம் கட்டியதை இடித்துவிட்டு இப்பகுதிக்கு வரச் சொல்லுங்கள்.

நாங்கள் அரசியல், அவியல் செய்ய இங்கு வரவில்லை. ஏழை மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். எங்கள் ஆட்சியில் நாங்கள் காப்பாற்றிக் கொடுத்தோம். இதில் எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி என்பதெல்லாம் கிடையாது. ஆளுகிற கட்சி மனிதாபிமான அடிப்படையில் நடந்து கொள்ள வேண்டும்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

Elon Musk: 'கடினமான வேலை; எதிரிகள் அதிகம்; ஆனால், சம்பளம் இல்லை' - எலான் மஸ்க்கின் புதிய வேலை என்ன?

அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னுடைய தேர்தல் பிரசாரத்தில் 'அமெரிக்காவைக் காப்பாற்றுங்கள்' என்ற முன்னெடுப்பை எடுத்து மக்களிடம் வாக்கு சேகரித்தார்.இதன் ஒரு பகுதியாக, தற்போது 'அரசு செயல்திறன் (Department of ... மேலும் பார்க்க

`அதானி வீட்டுக்குச் சென்றது உண்மைதான், ஆனால்...!' - அஜித் பவாரின் குற்றச்சாட்டு குறித்து சரத் பவார்!

கடந்த 2019ம் ஆண்டு மகாராஷ்டிராவில் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஆட்சியமைக்க எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜ.க மற்றும் சிவசேனா இடையே முதல்வர் பதவி தொடர்பாகக் கருத்து வேறுபாடு ஏற்பட்... மேலும் பார்க்க

எலான் மஸ்க்கின் ‘X’ தில்லாலங்கடி... அதிபர் தேர்தலில் ஏற்படுத்திய தாக்கமும் விளைவும் என்ன?

அமெரிக்க தேர்தலும் எலான் மஸ்கும்!நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ‘எக்ஸ்’ சமூக வலைதளமும், குறிப்பாக அதன் உரிமையாளர் எலான் மஸ்க்கும் முக்கியப் பங்கு வகித்ததை யாராலும் மறுக்க முடியாது. இந்தக் கா... மேலும் பார்க்க

Mumbai: "தாராவி நிலத்தை அதானிக்குக் கொடுக்க நினைக்கிறார் மோடி" - ராகுல் பேச்சின் பின்னணி என்ன?

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் முடிய இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில், பிரசாரம் சூடுபிடித்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, பா.ஜ.க தலைவர் ஜெ.பி.நட்டா, ராகுல் காந்... மேலும் பார்க்க

US : தடுப்பூசிகளின் தீவிர எதிர்ப்பாளர்... தற்போது ட்ரம்பின் சுகாதாரச் செயலர் - யார் இந்த கென்னடி?!

சமீபத்தில் நடந்த அமெரிக்க தேர்தலில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்டிரம்ப் தனது அமைச்சரவையில் யார் யார் இடம்பெற போகிறார்கள் என்பதை அறிவித்து வருகிறார். அதன்படி, தற்போது ட்ரம்ப், சுகாதாரச் செயல... மேலும் பார்க்க

NTK: நாதக நிர்வாகிகளை வெளியேற்றிய சீமான்; 'சர்வாதிகாரமின்றி எதையும் சரி செய்ய முடியாது' என விளக்கம்!

சர்வாதிகாரம் இல்லாமல் எதையும் சரி செய்ய முடியாது என்று சீமான் பேசியிருக்கிறார்.நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் திருநெல்வேலியில் நேற்று (நவம்பர் 15) பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. ... மேலும் பார்க்க