'ஸ்டாலின் கேட்டுக் கொண்டதால் ஈரோடு கிழக்கில் காங் போட்டியில்லை!' - செல்வப்பெருந்...
மது போதையில் அண்ணனைக் கொன்ற தம்பி கைது!
ஒடிசா மாநிலம் தென்கனால் மாவட்டத்தில் மது போதையில் அண்ணனை கத்தியால் குத்தி கொலை செய்த தம்பி கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்மாவட்டத்தின் ஹிந்தோல் பகுதியைச் சேர்ந்தவர் சுனந்தா நாயக் (வயது 37), மது போதைக்கு அடிமையான இவர் மது அருந்திவிட்டு வந்து அவரது வீட்டில் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஜன.8 அன்று இரவு வழக்கம்போல் மது போதையில் வீட்டிற்கு வந்தவர், தனது குடும்பத்தினரிடம் தகராறு செய்துள்ளார். இதை, அவரது அண்ணனான கோபிந்தா நாயக் (40) கண்டித்துள்ளார். இதனால், இருவருக்கும் மத்தியில் வாக்குவாதம் எழுந்துள்ளது. அப்போது, மதுபோதையில் இருந்த சுனந்தா கூர்மையான ஆயுதத்தை எடுத்து கோபிந்தாவின் தலையிலும் கைகளிலும் குத்தியுள்ளார். இந்த தாக்குதலினால் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார்.
இதையும் படிக்க:நகங்களுக்காகக் கொல்லப்பட்ட புலி?
இதனைத் தொடர்ந்து, கோபிந்தாவின் குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஹிந்தோல் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரது நிலை மேலும் மோசமடைந்ததினால் தென்கனால் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
பின்னர், பலியானவரது மகன் அளித்த புகாரின் அடிப்படையில் அங்கு சென்ற ஹிந்தோல் காவல் துறையினர் கோபிந்தாவின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து போலீஸார் நேற்று (ஜன.9) கொலையாளி சுன்ந்தாவை கைது செய்தனர். அவர் தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.