செய்திகள் :

மத்தியப் பிரதேசத்தில் 9 நாள்களுக்கு இறைச்சி விற்பனைக்குத் தடையா?

post image

மத்தியப் பிரதேசத்தில் ஹிந்து பண்டிகைகள் நவராத்திரியை முன்னிட்டு 9 நாள்களுக்கு இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்க ஹிந்து அமைப்புகள், பாஜக எம்.எல்.ஏ-க்கள் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தின் மைஹார் பகுதியில் மார்ச் 30 முதல் ஏப்ரல் 7 வரையிலான 9 நாள்களுக்கு நவராத்திரி பண்டிகையை ஒட்டி முட்டை, இறைச்சி விற்பனைக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

அதேபோல, மாநிலத்தின் இரு முக்கிய நகரங்களான போபால், இந்தூர் பகுதிகளிலும் அடுத்தடுத்து வரவிருக்கும் ஹிந்து, ஜெயின், சிந்தி, புத்த மத பண்டிகைகளை முன்னிட்டு 4 நாள்களுக்கு இறைச்சி விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.

குடி பத்வா மற்றும் சந்த் (மார்ச் 30), ராம நவமி (ஏப்ரல் 6), மஹாவீர் ஜெயந்தி (ஏப்ரல் 10), புத்த பூர்ணிமா (மே 12) ஆகிய பண்டிகை நாள்களில் பாஜக நிர்வாகத்தின் கீழுள்ள இரு நகரங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

4 நாள்கள் தனித்தனியே இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில், நவராத்திரியை முன்னிட்டு இந்தூர் நகரம் முழுவதும் 9 நாள்களுக்கு இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்க ஹிந்து அமைப்பான ஹிந்து ராஷ்டிர சங்கதன் வலியுறுத்தியுள்ளது.

”நவராத்திரி நாள்களில் இறைச்சிக் கடைகள் திறந்திருப்பதைக் கண்டால் எங்கள் அமைப்பினர் அவற்றை மூடுவார்கள்” என அந்த அமைப்பின் தலைவர் ராஜேஷ் சிரோத்கர் மிரட்டியுள்ளார்.

அதுமட்டுமின்றி, பாஜகவைச் சேர்ந்த பல எம்.எல்.ஏ-க்கள் 9 நாள்கள் இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர். இதில், அம்மாநில அமைச்சர்களும் அடங்குவர்.

ஹிந்து அமைப்பினர் இறைச்சி விற்பனைக்குத் தடை கோருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த காங்கிரஸ் தலைவர் சாச் சலூஜா, “கேஎஃப்சி, மெக் டொனால்ட்ஸ் போன்ற பெரிய உணவகங்களுக்கு இந்தத் தடை உத்தரவு ஏன் விதிக்கப்படுவதில்லை? பெரிய உணவகங்களைத் தவிர்த்துவிட்டு ஏன் சிறிய கடைகளின் உரிமையாளர்களை மட்டுமே குறிவைக்கிறீர்கள்?“ என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த நிலையில், பண்டிகைகள் வருவதையொட்டி ம.பி.யின் தாமோ நகரில் கடிகார கோபுரத்தின் மீது காவிக் கொடிகளைக் கட்ட முயன்ற ஹிந்து அமைப்பினரை அரசு அதிகாரிகள் தடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து, தலைமை முனிசிபல் அதிகாரி பிரதீப் சர்மாவின் முகத்தில் கருப்பு மையினைப் பூசி ஹிந்து அமைப்பினர் அட்டூழியம் செய்துள்ளனர். இதுபற்றி புகாரளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது.

இதையும் படிக்க | மசூதியில் தொழுகை நடத்திய ஹிந்து கடைக்காரர்: வலதுசாரி அமைப்புகள் எதிர்ப்பு!

பாஜக தலைவர் தேர்வு: மக்களவையில் அகிலேஷ் - அமித் ஷா பேச்சால் கலகலப்பு!

பாஜக தேசிய தலைவர் தேர்வு தொடர்பாக மக்களவையில் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு இடையே காரசார வாதம் நிகழ்ந்தது.மக்களவையில் வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா ... மேலும் பார்க்க

வக்ஃப் சொத்துகளால் நாட்டின் தலையெழுத்தே மாறும்: கிரண் ரிஜிஜு

வக்ஃப் வாரிய சொத்துகளை முறையாக நிர்வகித்தால் நாட்டின் தலையெழுத்தையே மாற்ற முடியும் என்று மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்... மேலும் பார்க்க

மணிப்பூரில் அகதிகள் பிரச்னையை மீண்டும் பரிசீலிக்க வேண்டும்: பிரேன் சிங்

1960 முதல் ஆயிரக்கணக்கான அகதிகள் மணிப்பூரில் குடியேறியுள்ளதாகவும், அந்த மக்களுக்கு மறுவாழ்வுக்கான உதவிகள் வழங்கப்பட்டதாகவும் அந்த மாநில முன்னாள் முதல்வர் என். பிரேன் சிங் கூறியுள்ளார். மணிப்பூரின் பாஜ... மேலும் பார்க்க

சட்டத்தின் மீது புல்டோசர் தாக்குதல்: காங்கிரஸ்

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை ஆராய்வதற்கு நேரம் கொடுக்காமல் சட்டத்தின் மீது புல்டோசர் தாக்குதல் நடத்துவதாக காங்கிரஸ் எம்பி கே.சி. வேணுகோபால் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.மக்களவையில் தாக்கல் செய்யப்பட... மேலும் பார்க்க

மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தாக்கல்!

மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு புதன்கிழமை தாக்கல் செய்தது. மேலும் பார்க்க

சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 4ஆம் தேதிதான் நிறைவடையவிருக்கிறது. சுமார் 19 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியிருக்கும் இந்தத் தேர்வுக்கான முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற தக... மேலும் பார்க்க