செய்திகள் :

மத்திய அமைச்சருடன் அரிட்டாபட்டி போராட்டக்குழுவினர் சந்திப்பு!

post image

பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் அரிட்டாபட்டி போராட்டக்குழுவினர் இன்று(புதன்கிழமை) மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை தில்லியில் சந்தித்துப் பேசியுள்ளனர்.

மதுரை மாவட்டம், மேலூா் அருகே அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் தோண்ட கடந்த ஆண்டு நவம்பா் மாதத் தொடக்கத்தில் ஏலத்தின் மூலம் மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.

இந்நிலையில் சுரங்கம் தோண்டும் திட்டத்தை ரத்து செய்யக் கோரி, அரிட்டாபட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி மக்கள், அரசியல் கட்சியினா், பல்வேறு அமைப்பினா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதையும் படிக்க | 2025 யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு அறிவிப்பு வெளியானது!

இதனைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் அரிட்டாபட்டி போராட்டக்குழுவினர் இன்று(புதன்கிழமை) மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை தில்லியில் சந்தித்துப் பேசியுள்ளனர்.

அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.

முன்னதாக, அரிட்டாபட்டி மக்களுக்கு இன்று ஒரு நல்ல தகவல் வரும் என்று அண்ணாமலை முன்னதாகவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆப்கனில் சீனர் கொலை! தலிபான் அரசு அறிவிப்பு!

ஆப்கானிஸ்தான் நாட்டின் வடகிழக்கு மாகாணத்தில் சீன நாட்டைச் சேர்ந்த ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தலிபான் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தஷ்கர் மாகாணத்தில் பயணம் செய்தபோது ‘லீ’ எனும் பின்பெயரைக் க... மேலும் பார்க்க

செய்வினை சந்தேகத்தில் கொலைவெறி தாக்குதல்! 70 வயது மூதாட்டி பலி!

ஒடிசா மாநிலம் ராயகாடா மாவட்டத்தில் செய்வினை வைத்ததாக சந்தேகித்து அடித்தும், கத்தியால் குத்தியும் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 70 வயது மூதாட்டி பலியானார்.ராயகாடாவின் மண்கடஜோலா கிராமத்தைச் சேர்ந்த ... மேலும் பார்க்க

டங்ஸ்டன் சுரங்கம்: நாளை(ஜன. 23) மகிழ்ச்சியான தகவல் வரும்! - அண்ணாமலை

மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக நாளை(வியாழக்கிழமை) மகிழ்ச்சியான தகவல் வரும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம், மேலூா் அருகே அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்ட... மேலும் பார்க்க

இறைத்தூதர் குறித்து அவதூறு பரப்பிய பாப் பாடகருக்கு மரண தண்டனை!

ஈரான் நாட்டைச் சேர்ந்த பிரபல பாப் இசை பாடகர் ஒருவர் இறைத்தூதர் குறித்து அவதூறு பரப்பியதற்காக அவருக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.ஈரானை சேர்ந்த பிரபல பாப் இசை பாடகரான டட்டலூ என்... மேலும் பார்க்க

பெண் தளபதி உள்பட 2 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொலை!

ஜார்க்கண்ட் மாநிலம் போகாரோ மாவட்டத்தில் இன்று (ஜன.22) காலை பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கி சூட்டில் பெண் தளபதி உள்பட 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.போகாரோ மாவட்டத்தின் பன்ஷி ஜர்வா வனப்பகு... மேலும் பார்க்க

சிறுவாபுரி செல்லும் பக்தர்களுக்கு அமைச்சர் சொன்ன குட் நியூஸ்!

சிறுவாபுரி முருகன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு புதிய செய்தியை தெரிவித்துள்ளார்.பக்தர்களின் வசதிக்காக திருத்தணி ரயில் நிலையத்திலிருந்து திர... மேலும் பார்க்க