கொழும்புவில் பிரதமர் மோடி: இந்தியா - இலங்கை இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்து!
மத்திய அரசைக் கண்டித்து கரூரில் தவெக ஆா்ப்பாட்டம்
வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றிய மத்திய அரசைக் கண்டித்து கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் ஜவஹா்பஜாா் தலைமை அஞ்சல் நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மேற்கு மாவட்டச் செயலாளா் மதியழகன் தலைமை வகித்தாா். பொருளாளா் ஆறுமுகம், இணைச் செயலாளா் விக்னேஸ்வரன், செயற்குழு உறுப்பினா்கள் விஜய்பிரசாத், பால்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் பங்கேற்றவா்கள் இஸ்லாமியா்களுக்கு எதிராக மக்களவையில் வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றிய மத்திய பாஜக அரசைக் கண்டித்து முழக்கமிட்டனா்.