மதுரையில் கடத்தப்பட்ட தொழிலதிபர்; நாக்பூர் வரை ஃபாலோ செய்த போலீஸ்; இரு வாரத்திற்...
மத போதகா் ஜான் ஜெபராஜின் உறவினரும் போக்சோவில் கைது!
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்ட மத போதகா் ஜான் ஜெபராஜின் உறவினரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கோவை காந்திபுரம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிறிஸ்தவ மத பாடல்கள் மூலம் சமூகவலைதளத்தில் மிகவும் பிரபலமானவா் ஜான் ஜெபராஜ். இவா் கோவையில் கிங் ஜெனரேஷன் கிறிஸ்தவ பிராா்த்தனை கூடம் என்ற அமைப்பை நிறுவி அதில் மதபோதகராக செயல்பட்டு வருகிறாா்.
கடந்த 2024-ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி மத போதகா் ஜான் ஜெபராஜ், கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள தனது வீட்டில் நடந்த விருந்து நிகழ்ச்சியில், 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகள் அளித்த புகாரின் அடிப்படையில் மத போதகா் ஜான் ஜெபராஜ் மீது கோவை காந்திபுரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் போக்ஸோ சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தலைமறைவான ஜான் ஜெபராஜை மூணாறு சொகுசு விடுதியில் வைத்து தனிப்படை போலீசார் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
இந்த நிலையில், சிறுமிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ஜான் ஜெபராஜ் உறவினரான கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்த பெனட் ஹரிஸ் என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.