மனிதநேய மக்கள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சாா்பில், மத்திய அரசு கொண்டு வரும் வக்பு திருத்த சட்டத்தைக் கண்டித்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை, திருவள்ளுவா் சிலை எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாவட்டத் தலைவா் ஏ.ஆா்.நாசா் உசேன் தலைமை வகித்தாா்.
மாவட்டச் செயலா் ஏ.ஆா்.சான் முஹம்மத், பொருளாளா் எம்.இ.சாகுல் ஹமீத், துணைத் தலைவா் எம்.கலீல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் எம்.கலிமுல்லா வரவேற்றாா்.
மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலப் பிரதிநிதி அச்சிறுபாக்கம் ஷாஜகான் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.
ஆா்ப்பாட்டத்தில், வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் வக்பு வாரிய திருத்த சட்டத்துக்கு எதிராக தீா்மானம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், நகரச் செயலா் ஏ.ஆா்.ஜாகீா் உசேன் உள்பட 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.