செய்திகள் :

மன்மோகன் சிங், ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா?

post image

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தொழிலதிபர் ரத்தன் டாடா ஆகியோரின் பெயர்கள் இந்தாண்டுக்கான பாரத ரத்னா விருதுப் பட்டியலில் முதன்மையாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியக் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது பாரத ரத்னா. நாட்டுக்காகச் சேவையாற்றுபவர்களைப் பாராட்டு விதமாக வழங்கப்படும் இந்த விருது இதுவரை 53 பேர் பெற்றுள்ளனர்.

கலை, அறிவியல், இலக்கியம், கலாசாரம், விளையாட்டு, பொதுச் சேவை உள்ளிட்ட பிரிவுகளில் சிறப்பான பங்களிப்பு செய்தவர்களுக்கு வழங்கப்படும் 'பாரத ரத்னா' விருது 1954-இல் அறிமுகமானது. வாழ்பவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என்று தொடங்கப்பட்ட விருதளிப்பு, 1955-இல் மறைந்தவர்களுக்கும் வழங்க வழிவகை செய்யப்பட்டது.

ஓர் ஆண்டில் அதிகபட்சமாக மூன்று பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்தாண்டு 5 பேருக்கு வழங்கப்பட்டது.

குடியரசு நாளையொட்டி, ஜனவரி இறுதி அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் பாரத ரத்னா விருது பெறுபவர்களின் பட்டியலை குடியரசுத் தலைவர் வெளியிடுவார்.

இந்த நிலையில், கடந்தாண்டு மறைந்த ரத்தன் டாடா மற்றும் மன்மோகன் சிங் ஆகியோருக்கு இந்தாண்டு பாரத ரத்னா விருது வழங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

ரத்தன் டாடா மற்றும் மன்மோகன் சிங் ஆகியோர் மறைந்தபோது பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்ற கருத்து பரவலாக முன்வைக்கப்பட்டது. ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கக் கோரி மகாராஷ்டிர சட்டப்பேரவையில் தீர்மானமும் கொண்டுவரப்பட்டது.

மேலும், மறைந்த சமாஜவாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ், ஹிந்துத்துவ சித்தாந்தவாதி சாவர்க்கர், கல்வியாளர்கள் ஜோதிராவ் புலே மற்றும் சாவித்ரிபாய் புலே, பிகாரின் முதல் முதல்வர் ஸ்ரீ கிருஷ்ணா சிங், ஒடிஸாவின் முன்னாள் முதல்வர் பிஜு பட்நாயக் ஆகியோரின் பெயர்களையும் மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.

இந்தாண்டு மூன்று அல்லது நான்கு நபர்களின் பெயர்களை பாரத ரத்னா விருதுக்கு மத்திய அரசு பரிந்துரைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டீ விற்றவரின் வதந்தியே மகாராஷ்டிர ரயில் விபத்துக்குக் காரணம்: அஜித் பவார்

மகாராஷ்டிரத்தின் புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலுக்குள் டீ விற்பவர் ஏற்படுத்திய வதந்தியின் விளைவுதான் இந்த ரயில் விபத்து என்று மகாரஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் கூறியுள்ளார். லக்னெளவில் இருந்து மும்பை நோக்க... மேலும் பார்க்க

மகாராஷ்டிர ரயில் விபத்து: ராகுல் இரங்கல்!

மகாராஷ்டிர ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரத்தில் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக பரவிய வதந்தியால் அவசரமாக கீழே ... மேலும் பார்க்க

வாய்ஸ் கால், எஸ்எம்எஸ்-க்கு மட்டும் புதிய திட்டங்களை அறிவித்த ஜியோ, ஏர்டெல்!

ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் டேட்டா இன்றி வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் வசதிக்கான புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்துள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் டேட்டாவுடன் கூடிய ரீசார்ஜ் திட்டங்களையே பயன்பாட்டில் ... மேலும் பார்க்க

தில்லியில் வேலையில்லா திண்டாட்டம் முடிவுக்கு வரும்: கேஜரிவால் உறுதி

தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் தலைநகரில் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்போம் என்று ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அ... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவைக் கலக்கிய அழகு நட்சத்திரம் மோனலிசா!

துடிப்பான பார்வை, அலட்சியமான புன்னகை, பயமில்லாத பேச்சால் பார்ப்பவர்களைக் கவரும் அழகிய இளம்பெண் மோனி போஸ்லே, சமூக ஊடகத்தால், ஒரே நாளில் உலகம் அறியும் அழகியாக மாறியிருக்கிறார். மகா கும்பமேளாவுக்கு வந்து... மேலும் பார்க்க

மத்திய அரசிடமிருந்து இதுவரை எந்த உதவியும் கிடைக்கவில்லை: பினராயி விஜயன்

வயநாடு நிலச்சரிவில் உயிர்பிழைத்தவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க இதுவரை மத்திய அரசிடம் இருந்து இதுவரை எந்த உதவியும் வரவில்லை என்றாலும், முதல்வரின் பேரிடர் நிவாரண நிதியில் பெறப்பட்ட நிதி உயிர்பிழைத்தவர்களுக... மேலும் பார்க்க