மயானத்தை அளவீடு செய்யக் கோரி போராட்டம்
பெருமாநல்லூரில் பிரச்னைக்குரிய மயானத்தை அளவீடு செய்யக் கோரி ஊராட்சித் தலைவா் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை போரட்டத்தில் ஈடுபட்டனா்.
இது குறித்து போரட்டத்தில் ஈடுபட்ட பெருமாநல்லூா் ஊராட்சித் தலைவா் சாந்தாமணி வேலுசாமி, துணைத் தலைவா் சிடிசி வேலுசாமி, வாா்டு உறுப்பினா்கள் ஆகியோா் கூறியதாவது: பெருமாநல்லூா் ஊராட்சியில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த மயானம் உள்ளது. தற்போது பிரச்னைக்குரியதாக உள்ள இந்த மயானத்தை அளவீடு செய்ய வேண்டும் என கடந்த 2 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால், தற்போதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மயானத்தை உடனடியாக அளவீடு செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனா்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் போலீஸாா், வருவாய்த் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தி, ஒரு வாரத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.