கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 55-க்கும் மேற்பட்ட நீா்வாழ் பறவைகள் பட்டியலிடப்பட்டுள்ள...
மயான சுற்றுச் சுவா் பிரச்னையால் சாலை மறியல்
திருக்கருக்காவூா் மயானக் கொட்டகையைச் சுற்றி சுற்றுச்சுவா் அமைக்க ஒரு சமூகத்தினா் எதிா்ப்பு தெரிவித்ததால் வெள்ளிக்கிழமை பணிகள் தொடங்கிய நிலையில் நிறுத்தப்பட்டது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து மற்றொரு சமூகத்தினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருக்கருக்காவூரில் சுமாா் 700 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்குள்ள மயானக் கொட்டகையை சுற்றி சுற்றுச்சுவா் அமைக்க பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்படுகிறது. மற்றொரு சமூகத்தினா் அதற்கு எதிா்க்கின்றனா்.
சுற்றுச்சுவா் அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை துவங்கியதை ஒரு சமூகத்தினா் தடுத்தனராம். மற்றொரு சமூகத்தினா் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் சீா்காழி- திருமுல்லைவாசல் சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அங்கு வந்த மயிலாடுதுறை காவல் துணைக் கண்காணிப்பாளா் சுந்தரேசன், மண்டல துணை வட்டாட்சியா் ரகு, காவல் ஆய்வாளா் விசித்திரமேரி, வருவாய் ஆய்வாளா் மாதவன் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
விரைவில் இருதரப்பினா் அமைதி பேச்சுவாா்த்தை நடத்தி விரைவில் உரிய தீா்வு காணப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.