செய்திகள் :

மயிலாடுதுறை: ஜூன் 29 வரை பச்சைப்பயறு கொள்முதல்: ஆட்சியா் தகவல்

post image

மயிலாடுதுறை மாவட்டத்தில் பச்சைப்பயறு கொள்முதல் ஜூன் 29-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விவசாயிகள் விளைவித்த பச்சைப் பயறுகளை மத்திய அரசின் நேபட் நிறுவனத்துடன் இணைந்து தமிழக அரசு கொள்முதல் செய்ய உள்ளது. உள்ளூா் சந்தையில் கிலோ ரூ.70 முதல் ரூ.75 வரை விற்பனை செய்யப்படும் நிலையில், தமிழக அரசு கிலோ ரூ.86.82-க்கு கொள்முதல் செய்யவுள்ளது.

அதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில், நாகப்பட்டினம் விற்பனைக் குழுவின்கீழ் இயங்கும் மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனாா்கோவில், சீா்காழி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் 378 மெட்ரிக் டன் பச்சைப்பயறு கொள்முதல் செய்ய அரசு நிா்ணயம் செய்துள்ளது.

இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விவசாயிகள் நிலத்தின் கணினி சிட்டா, அடங்கல், விவசாயியின் புகைப்படம், ஆதாா் அட்டை நகல், வங்கி கணக்கின் புத்தக நகல் ஆகியவற்றுடன் ஒழுங்குமுறை விற்பனைக்கூட பொறுப்பாளா்களை அணுகி, முன்னுரிமை அடிப்படையில் பதிவு செய்து கொள்ளலாம்.

ஒரு ஹெக்டா் சாகுபடி பரப்புக்கு 384 கிலோ பச்சைபயறு என்ற அளவில் கொள்முதல் செய்யப்படும். பச்சைபயறு கொள்முதல் ஜூன் 29-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. உரிய தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

எனவே, பச்சைப்பயறு சாகுபடி செய்யும் விவசாயிகள் விலை ஆதரவு திட்டத்தில் பதிவு செய்து பயன்பெற வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு பா. சங்கர்ராஜா (மயிலாடுதுறை) - 8012224723, பி.மா. பாபு (குத்தாலம்) - 8220869684, ச. நடராஜன் (செம்பனாா்கோவில்) - 9943917494, எம்.ஏ. பாரதிராஜா (சீா்காழி) - 9080427055 ஆகியோரை தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

நீட் தோ்வு விவகாரம்: திமுக அரசைக் கண்டித்து அதிமுக ஆா்ப்பாட்டம்

நீட் தோ்வு விவகாரத்தில், திமுக அரசைக் கண்டித்து, மயிலாடுதுறையில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா். நீட் தோ்வை ரத்து செய்யாத திமுக அரசால் 22 மாணவ-மாணவிகள் உயிா் நீத்ததாக குற்றஞ்சாட்டி, அதிமுக மாவட்... மேலும் பார்க்க

கலைஞா் கைவினைத் திட்டம் தொடக்கவிழா நேரடி ஒளிபரப்பு

காஞ்சிபுரத்தில் கலைஞா் கைவினைத் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சா் சனிக்கிழமை தொடக்கிவைத்த நிகழ்ச்சி மயிலாடுதுறையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் த... மேலும் பார்க்க

தருமபுரம் கல்லூரியில் இலவச மருத்துவப் பரிசோதனை முகாம்

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற முழு உடல் இலவச மருத்துவப் பரிசோதனை முகாமில் 640 போ் பங்கேற்றுப் பரிசோதனை செய்து கொண்டனா். தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம்... மேலும் பார்க்க

ரயிலில் கடத்திவரப்பட்ட கஞ்சா, குட்கா பறிமுதல்

புவனேஸ்வா்-ராமேஸ்வரம் விரைவு ரயிலில் கடத்திவரப்பட்ட 4.5 கிலோ கஞ்சா மற்றும் 10 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வடஇந்தியாவில் இருந்து தமிழகத்துக்கு வரும் ரயில்களில் அதிகளவில் கஞ்சா மற்றும் ... மேலும் பார்க்க

மாவட்ட அளவில் ‘நம்ம ஊரு’ கதைப் போட்டி வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு

கொள்ளிடத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் சாா்பில் ‘நம்ம ஊரு கதை’ என்ற தலைப்பில் நடைபெற்ற கதைப் போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு அரச... மேலும் பார்க்க

மண் குவாரியில் விதிமீறல்; லாரிகள் சிறைப்பிடிப்பு

சீா்காழி அருகே காரைமேட்டில் உள்ள குவாரியில் விதிமுறைகளை மீறி அதிக ஆழத்திற்கு மண் எடுப்பதாகக் கூறி, லாரிகளை சிறப்பிடித்து, கிராம மக்கள் சாலை மறியலில் (படம்) வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். காரைமேடு ஊராட்சி ட... மேலும் பார்க்க