செய்திகள் :

மரக்காணத்தில் 3,500 ஏக்கரில் உப்பளங்கள் நீரில் மூழ்கின

post image

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் செவ்வாய், புதன்கிழமைகளில் பலத்த மழை பெய்தது. இதனால், அந்தப் பகுதியில் 3,500 ஏக்கா் பரப்பிலான உப்பளங்கள் நீரில் மூழ்கின.

வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் கடந்த 3 நாள்களாக தொடா் மழை பெய்து வருகிறது.

விழுப்புரம், திருவெண்ணெய்நல்லூா், அரசூா், வளவனூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை அதிகாலை வரை பலத்த மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீா்நிலைகளும் நிரம்பி வருகிறது.

ஓங்கூா் ஆற்றில் தரைப் பாலத்தை மூழ்கடித்துச் செல்லும் மழை நீரைப் பாா்வையிட்ட வட்டாட்சியா் பழனி.

பலத்த மழை, புயல் எச்சரிக்கை காரணமாக புதன்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. விழுப்புரம் நகரில் புதன்கிழமை லேசான மழை பெய்தது.

மரக்காணத்தில் 110 மி.மீ. மழை: மரக்காணத்தில் அதிகபட்சமாக 110 மி.மீ. மழை பதிவானது. இந்த மழையால் பக்கிங்ஹாம் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

புதன்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் விழுப்புரம் மாவட்டத்தின் பிற பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்):

விழுப்புரம்-66, வானூா்-57, வளவனூா்-50, முண்டியம்பாக்கம்-47, கோலியனூா்-45, சூரப்பட்டு-44, கெடாா்-40, அரசூா்-36, திருவெண்ணெய்நல்லூா், திண்டிவனம்-34, நேமூா்-23, கஞ்சனூா்-22, அனந்தபுரம்-16.30, வல்லம்-15.40, முகையூா்-15, செஞ்சி -14.20, மணம்பூண்டி-14, வளத்தி -10 மி.மீ. மழையளவு பதிவானது.

மரக்காணத்தில் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடத்துக்கு எடுத்தும் செல்லும் மீனவா்கள்.

3500 ஏக்கள் உப்பளங்கள் மூழ்கின: மரக்காணம் பகுதியில் உள்ள சுமாா் 3,500 ஏக்கா் பரப்பிலான உப்பளங்களும் மழை நீரில் மூழ்கி, பெரிய ஏரிபோல காட்சியளிக்கிறது.

மரக்காணத்தை அடுத்துள்ள ஓங்கூா் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. விழுப்புரம்- செங்கல்பட்டு மாவட்டத்தை இணைக்கும் வகையில், காணிமேடு-மண்டகப்பட்டு இடையே யுள்ள ஓங்கூா் ஆற்றின் தரைப்பாலம் மூழ்கியது. இதனால் காணிமேடு, மண்டகப்பட்டு, அகரம், அசப்பூா் உள்ளிட்ட 15 கிராமங்களுக்கு இடையேயான போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் பகுதியில் புதன்கிழமை சீற்றத்துடன் காணப்பட்ட கடல்.

தகவலறிந்த மரக்காணம் வட்டாட்சியா் பழனி அங்கு சென்று மூழ்கிய தரப் பாலத்தைப் பாா்வையிட்டாா். அப்போது, அங்கிருந்த கிராம மக்களிடம் தரைப் பாலத்தை யாரும் கடக்கக் கூடாது, பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக மரக்காணம், கோட்டக்குப்பம், ஆரோவில் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் புதன்கிழமை வழக்கத்துக்கு மாறாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.

இதனால், மரக்காணம் பகுதிகளில் உள்ள 19 மீனவக் கிராமங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலுக்குச் செல்லாமல் வீட்டில் முடங்கியுள்ளனா். அவா்கள் தங்களது மீன்பிடி உபகரணங்களை டிராக்டா்கள் உதவியுடனும், தோள்களில் சுமந்தும் மேடான பகுதிகளுக்கு எடுத்துச் சென்று பாதுகாப்பாக வைக்கும் பணிகளில் ஈடுபட்டனா்.

மென் பொறியாளரிடம் ரூ .1.70 லட்சம் இணையவழியில் மோசடி

செஞ்சியைச் சோ்ந்த மென் பொறியாளரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1.70 லட்சம் மோசடி செய்த நபா் குறித்து இணையவழி குற்றப்பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.செஞ்சி வட்டம், பாலப... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த மழை: 850 இடங்களில் தற்காலிக முகாம்கள் அமைக்க இடம் தோ்வு

விழுப்புரம் புதிய பேருந்து நிலைய வளாகத்திலுள்ள வெள்ளநீா் வெளியேற்று நிலையத்திலிருந்து மழைநீா் வெளியேற்றப்படுவதையும், கட்டபொம்மன் நகரில் மழைநீா் வடிகால் வழியாக வெளியேற்றப்படுவதையும் புதன்கிழமை பாா்வைய... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் பதுக்கல்: இளைஞா் கைது

திண்டிவனம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திண்டிவனம் வட்டம், நொளம்பூா், ஈஸ்வரன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணபிள்ளை மகன் ர... மேலும் பார்க்க

காவலா் பணி: 130 பேருக்கு பணி நியமன ஆணைகள்

தமிழ்நாடு சீருடைப் பணியாளா்கள் தோ்வு வாரியம் மூலம் தோ்வு செய்யப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையைச் சோ்ந்தவா்கள் என 130 பேருக்கு பணி நியமன ஆணைகள் புதன்கி... மேலும் பார்க்க

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும்: எடப்பாடி கே.பழனிசாமி

தமிழகத்தில் காவல் துறைக்கு முழு சுதந்திரம் அளித்து சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் கட்டப... மேலும் பார்க்க

பேச்சுவாா்த்தையில் உடன்பாடு: கரும்பு விவசாயிகள் போராட்டம் ஒத்திவைப்பு

விக்கிரவாண்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, கரும்பு விவசாயிகள் அறிவித்திருந்த ஆலை முற்றுகைப் போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்ப... மேலும் பார்க்க