செய்திகள் :

மறுவெளியீடானது மெர்சல் திரைப்படம்!

post image

விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் இன்று (ஜூன்.20) மறுவெளியீடாகியுள்ளது.

நடிகர் விஜய்யின் பிறந்தநாளை (ஜூன்.22) முன்னிட்டு இந்தப் படம் மறுவெளியீடாகியுள்ளதாகப் படக்குழு கூறியுள்ளது.

ஏற்கனவே, மறுவெளியீடான விஜய்யின் கில்லி திரைப்படம் ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அசத்தியது.

கடைசியாக மறுவெளியீடான வெளியான சச்சின் திரைப்படமும் நல்ல லாபத்தைக் கொடுத்ததாக அதன் தயாரிப்பாளர் கூறியது குறிப்பிடத்தக்கது.

அட்லி இயக்கத்தில் மெர்சல் திரைப்படம் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியானது.

இந்தப் படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன், வடிவேலு என சிறப்பான கூட்டணி இருந்தது.

இந்தப்படும் அரசியல் ரீதியாக பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது. அதனாலேயே படத்தின் வசூலும் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய் இனிமேல் படங்களில் நடிக்க மாட்டேன் எனக் கூறியதால் கடைசி படமான ஜனநாயகனில் நடித்து வருகிறார்.

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கி அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் தேர்தலில் போட்டியிடவிருக்கிறார்.

Mersal poster
மெர்சல் போஸ்டர்.

விஜய் பிறந்தநாளில் புதிய அப்டேட்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

நடிகர் விஜய் நடிக்கும் ஜன நாயகன் படத்தின் புதிய அப்டேட்டை படத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் 69-வது படமான ஜன நாயகன் திரைப்படத்தை எச். வினோத் இயக்குகிறார். ஆக்சன்... மேலும் பார்க்க

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட்: செஷன்களின் இந்திய நேரம்!

இந்திய அணி வெளிநாட்டில் விளையாடும்போது இந்திய நேரப்படி எப்போது விளையாடுகிறது என்ற குழப்பம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏற்படுவது வழக்கமானதுதான். இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் ... மேலும் பார்க்க

1,250 கோல் பங்களிப்பு..! உலக கால்பந்து வரலாற்றில் மெஸ்ஸி புதிய சாதனை!

உலக கால்பந்து வரலாற்றில் மெஸ்ஸி 1,250 கோல்கள் அடித்ததில் பங்குபெற்றுள்ள முதல் வீரராக புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். கிளப் உலகக் கோப்பையில் லியோனல் மெஸ்ஸி இன்டர் மியாமி அணிக்காக விளையாடி வருகிறார். ச... மேலும் பார்க்க

அதர்வா எதிர்பார்த்த வெற்றி: ரசிகர்கள் நெகிழ்ச்சி!

நடிகர் அதர்வா நடித்துள்ள டிஎன்ஏ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மான்ஸ்டர், ஃபர்ஹானா படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேஷன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நடிகர் அதர்வா உடன் நடிகை நிம... மேலும் பார்க்க

பல காரணங்களால் குபேரா சிறப்பான படம்: சாய் பல்லவி

நடிகை சாய் பல்லவி குபேரா திரைப்படம் பல வகைகளில் சிறப்பானது என தனது எக்ஸ் பக்கத்தில் நீண்ட பதிவில் கூறியுள்ளார். நடிகர் தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தை தெலுங்கு இயக்குநர் சேகர் கமூலா இயக்கியுள்ளார். இதி... மேலும் பார்க்க

மெஸ்ஸி மேஜிக்: கிளப் உலகக் கோப்பையில் இன்டர் மியாமிக்கு முதல் வெற்றி!

கிளப் உலகக் கோப்பையில் இன்டர் மியாமி அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. அமெரிக்காவின் ஜார்ஜியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் திடலில் கிளப் உலகக் கோப்பை பிரிவு ’ஏ’வில் உள்ள இன்டர் மியாமி அணியும் போர்டோ அ... மேலும் பார்க்க