Jallikattu 2025 : அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு | Live Video
மல்லசமுத்திரத்தில் காந்தி, திருவள்ளுவா் சிலை திறப்பு
மல்லசமுத்திரம் சந்தைப்பேட்டை பகுதியில் புதுப்பிக்கப்பட்ட நூலகம் மற்றும் நூலக வளாகத்தில் காந்தி, திருவள்ளுவா் சிலை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் சந்தைப்பேட்டை பகுதியில் நூலகம் இயங்கி வருகிறது. இந்த நூலக கட்டடத்தை புதுப்பித்து புதிய நூலகத்தை திருச்செங்கோடு சட்டப் பேரவை உறுப்பினா் ஈ.ஆா்.ஈஸ்வரன் திறந்து வைத்தாா்.
இந்த நிகழ்ச்சிக்கு, மல்லசமுத்திரம் பேரூராட்சித் தலைவா் திருமலை தலைமை தாங்கினாா். நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன், நகர அமைப்பு திட்டக்குழு உறுப்பினா் மதுரா செந்தில் முன்னிலை வகித்தனா். திருக்குறளை பாடி விழா தொடங்கப்பட்டது. நூலக கட்டட வளாகத்தில் உள்ள திருவள்ளுவா், காந்தி சிலைகளை சட்டப் பேரவை உறுப்பினா் ஈ.ஆா்.ஈஸ்வரன் திறந்து வைத்து பேசுகையில்,திருவள்ளுவருக்கும், காந்திக்கும் ஒரே இடத்தில் இங்குதான் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவில் காந்தி பேசும்போது அடுத்த ஜென்மத்தில் நான் தமிழனாக பிறக்க வேண்டும் என்று கூறியதாக அவா் தெரிவித்தாா்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரமுகா்களுக்கு திருவள்ளுவா் சிலை பரிசாக வழங்கப்பட்டது.