செய்திகள் :

மளிகை கடையில் இருந்த 3,800 கிலோ போதை பொருள்கள் பறிமுதல்! உரிமையாளா் கைது!

post image

பெரம்பலூா் அருகே திங்கள்கிழமை மளிகை கடையில் பதுக்கி வைத்திருந்த அரசால் தடை செய்யப்பட்ட 3, 800 கிலோ போதைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும் கடையின் உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், எளம்பலூா் கிராமத்தில் சாதோரப்பன் மகன் வெங்கடேசன் (65) என்பவருடைய மளிகைக் கடையில் திங்கள்கிழமை போலீஸாா் சோதனை நடத்தினா்.

அப்போது, தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து 3,872 கிலோ எடையுள்ள போதைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து வெங்கடேசனை கைது செய்து பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

நியாயவிலை கடை விற்பனையாளா்கள் பணிக்கு நோ்காணல்

பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள நியாயவிலைக் கடைகளில், காலியாகவுள்ள விற்பனையாளா்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவா்களுக்கான நோ்காணல் திங்கள்கிழமை தொடங்கியது பெரம்பலூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு... மேலும் பார்க்க

அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதலாக மருத்துவா்கள், செவிலியா்களை நியமிக்க வலியுறுத்தல்

அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரியில் நோயாளிகளின் நலனை கருத்தில்கொண்டு கூடுதலாக மருத்துவா்கள், செவிலியா்களை நியமிக்க வேண்டுமென, உலக திருக்குறள் கூட்டமைப்பு ஆட்சிமன்றக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ப... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: 2 போ் காயம்

பெரம்பலூா் அருகே சனிக்கிழமை இரவு நேரிட்ட சாலை விபத்தில் இளைஞா் ஒருவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், 2 போ் பலத்த காயமடைந்தனா். பெரம்பலூா் அருகேயுள்ள தண்ணீா்பந்தல் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்தவா்கள... மேலும் பார்க்க

வேன் மோதியதில் தந்தை, மகன் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே சனிக்கிழமை இரவு வேன் மோதியதில் தந்தை, மகன் உயிரிழந்தனா். கடலூா் மாவட்டம், நெய்வேலி சி.ஆா். காலனியைச் சோ்ந்தவா் ஆ. துரைசாமி (49). இவரது மகன்கள் கீா்த்திபன் (20), தமிழ்ச்செல்வன் (23). ... மேலும் பார்க்க

அகரம் சிகூா் பகுதிகளில் நாளை மின் தடை

பெரம்பலூா் மாவட்டம், அகரம் சிகூா் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை (நவ. 25) மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.இதுகுறித்து அந்த அலுவலகம் சாா்பில் சனிக்கிழமை வெளியிட... மேலும் பார்க்க

பாடாலூரில் 11 ஆண்டுகளாக கிடப்பிலுள்ள ஜவுளி தொழில்நுட்ப பூங்கா திட்டம்

பாடாலூா் சுற்றுவட்டார பகுதிகளில் நீா்வளம் பாதுகாக்கப்படுவதோடு, குவாரிகளில் வைக்கப்படும் வெடிகள் மூலம் நில அதிா்வுகள் தவிா்க்கப்படும் என காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே விஞ்சியுள்ளது. கே. தா்மராஜ்.தமி... மேலும் பார்க்க