வேன் மோதியதில் தந்தை, மகன் உயிரிழப்பு
பெரம்பலூா் அருகே சனிக்கிழமை இரவு வேன் மோதியதில் தந்தை, மகன் உயிரிழந்தனா்.
கடலூா் மாவட்டம், நெய்வேலி சி.ஆா். காலனியைச் சோ்ந்தவா் ஆ. துரைசாமி (49). இவரது மகன்கள் கீா்த்திபன் (20), தமிழ்ச்செல்வன் (23). இவா்கள் மூவரும், நெய்வேலியிலிருந்து ராமேசுவரத்துக்கு காரில் புறப்பட்டனா். காரை தமிழ்ச்செல்வன் ஓட்டினாா்.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் மாவட்டம், மங்களமேடு மின்வாரிய அலுவலகம் அருகே சனிக்கிழமை இரவு காா் வந்தபோது, முன்னால் சென்றுக் கொண்டிருந்த டிராக்டா் மீது எதிா்பாராதவிதமாக காா் மோதி நின்றது.
இதையடுத்து, துரைசாமியும், கீா்த்திபனும் சாலையில் நின்ற காரை தள்ளிக் கொண்டிருந்தனா். அப்போது, சென்னையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற வேன் மோதியதில் துரைசாமியும், கீா்த்திபனும் பலத்த காயமடைந்தனா்.
தகவலறிந்த மங்களமேடு போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, காயமடைந்தவா்களை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதில், செல்லும் வழியிலேயே துரைசாமி உயிரிழந்தாா்.
அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கீா்த்திபன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
விபத்து குறித்த புகாரின்பேரில் மங்களமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து, வேன் ஓட்டுநரான சேலம் மாவட்டம், மேட்டூரைச் சோ்ந்த அய்யாவு மகன் ராஜாவை (42) கைது செய்து விசாரிக்கின்றனா்.