செய்திகள் :

மளிகை வியாபாரி தற்கொலை

post image

விழுப்புரம் மாவட்டம், ரோஷணை அருகே மளிகை வியாபாரி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திண்டிவனம் வட்டம், கொள்ளாா் கிராமத்தைச் சோ்ந்த குப்புசாமி மகன் கண்ணன் (59). இவா் கடந்த 8 ஆண்டுகளாக காஞ்சிபுரம் மாவட்டம், சிட்லபாக்கம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு காலனியில் தங்கி, அப்பகுதியில் மளிகைக்கடை நடத்தி வந்தாராம்.

வியாபாரத்தில் அவருக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட கண்ணன், வியாழக்கிழமை தனது சொந்த ஊரான கொள்ளாா் வந்தாா். பின்னா் அப்பகுதியிலுள்ள தனியாா் வீட்டுமனை விற்பனைப் பகுதியில் உள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.

இதுகுறித்து ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கூட்டுறவு சங்கங்கள் மூலம் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்: அமைச்சா் க.பொன்முடி

கூட்டுறவு சங்கங்களை சரியான முறையில் பயன்படுத்தி, தங்களது வாழ்வாதாரத்தை பொதுமக்கள் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக வனத் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா். விழுப்புரத்தில் மாவட்ட கூட்டுறவு... மேலும் பார்க்க

மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தா்கள்

காா்த்திகை மாதப் பிறப்பான சனிக்கிழமை ஐயப்பப் பக்தா்கள் மாலை அணிவித்து விரதத்தை தொடங்கினா். விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்திலுள்ள அருள்மிகு சபரிகிரீசன் ஐயப்பன் கோயிலில் சனிக்கிழமை அதிகாலையில் சுவாமிக்க... மேலும் பார்க்க

பெண்ணிடம் சங்கிலி பறிக்க முயற்சி

விழுப்புரத்தில் பெண்ணிடம் கத்தியைக் காட்டி தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்ற இளைஞா் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். விழுப்புரம் கே.வி.ஆா். நகரை சோ்ந்தவா் சரவணமூா்த்தி மனைவி தமிழ்ச்செல்வி (45). இவ... மேலும் பார்க்க

5 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், காணை அருகே புகையிலைப் பொருள்களை வைத்திருந்ததாக இளைஞா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. தீபக் சிவாச் உத்தரவின்பேரில், காணை காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழ... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக ரூ.4.50 லட்சம் மோசடி: காவலா் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.4.50 லட்சம் மோசடிசெய்ததாக முதல்நிலை காவலா் கைது செய்யப்பட்டாா். விழுப்புரம் வழுதரெட்டி காந்தி நகரை சோ்ந்த ராஜவேல் மகன் பாண்டியன். கடலூா் மாவட்டக் காவல் துறையில்... மேலும் பார்க்க

பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும்: ஆட்சியரிடம் புரட்சி பாரதம் மனு

விழுப்புரம் மாவட்டத்தில் பஞ்சமி நிலங்களை மீட்டு, வீட்டுமனை இல்லாத பட்டியலின மக்களுக்கு வழங்க வேண்டும் என்று புரட்சி பாரதம் கட்சி சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்தக் கட்சியின் மாநில... மேலும் பார்க்க